Wednesday, 12 October 2011
Tuesday, 11 October 2011
பள்ளி கட்டிட நிதி _நாகை மாவட்ட மஷ்ஜிதூர் நூர் பள்ளி
TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 1.10.2011 அன்று நாகை மாவட்ட மஷ்ஜிதூர் நூர் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு உதவியாக ரூ 21062 வழங்கப்பட்டது. அல்கம்துளில்லாஹ்...
posted by SM.YOUSUF
TNTJ வின் உள்ளாட்சி தேர்தல் நிலைபாடு, பத்திரிக்கை செய்தி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் சார்பாக TNTJ வின் உள்ளாட்சி தேர்தல் நிலைபாடு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இது கடநத் 24-9-2011 அன்று தினரகன் பத்திரிக்கையில் வெளியானது. மேலும் தினத்தந்தியில் கடந்த 3-10-2011 அன்று வெளியானது.
posted by SM.YOUSUF
மங்கலம் கோல்டன் டவர் கிளையில் மக்தப் மதரஸா
மங்கலம் கோல்டன் டவர் கிளையில் மக்தப் மதரஸா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையில் கடந்த 25-9-2011 அன்று சிறுவர்களுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்.posted by SM.YOUSUF
Wednesday, 5 October 2011
திருப்பூரில் ரூபாய் 7045 மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 10-9-2011 அன்று ஏழை சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 7045 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF
திருப்பூர் மாவட்ட தாயிக்கள் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட தாயிக்கள் ஆலோசனைக் கூட்டம் கடநத் 18.09.2011 அன்று நடைபெற்றது. இதில் தாயி பொறுப்பாளர் சகோ முஹம்மத் சலீம் அவர்கள் பேச்சாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் எனும் தலைப்பில் உரையாற்றினார். மேலும் தஃவா பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இரத்த தான சேவையை பாராட்டி விருது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி கடந்த 15-9-2011 அன்று திருப்புர் மாவட்டம் கலக்டர் மதிவாணன் விருது வழங்கினார்கள். இதை மாவட்ட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.posted by SM.YOUSUF
Thursday, 8 September 2011
கேள்வி.? பதில்.!
கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளை சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடுகிறீர்கள்?நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை
இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும் போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.
ஆடு, மாடு போன்றவை உயிருடன் இருக்கும் போது அறுத்தால் மட்டுமே அதிருந்து இரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும் போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.
இது மார்க்க ரீதியான காரணம்.
ஆசிரியர் : P.ஜைனுல் ஆபிதீன்
நூலின் பெயர்: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்posted by SM.YOUSUF
பராஅத்தும் மத்ஹபுகளும்
நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)
மற்றொரு ஹதீஸில் வருகிறது
நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி (7280)
நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் ” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,
மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.
மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)
ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)
பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி : tntj.net
posted by SM.YOUSUFதிருப்பூரில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – பத்திரிக்கை செய்திகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
இந்த செய்தி தினகரன், தினமலர்,தினமணி,தமிழ் முரசு உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளியானது.
posted by SM.YOUSUF
இந்த செய்தி தினகரன், தினமலர்,தினமணி,தமிழ் முரசு உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளியானது.
posted by SM.YOUSUF
Tuesday, 6 September 2011
Monday, 22 August 2011
இஸ்லாம் ஓர் ஈர்ப்புசக்தி
இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டது என்று இஸ்லாத்தின் எதிரிகள், குறிப்பாக கிறித்தவ நாடுகளின் ஊடகங்கள் தொடர்ந்து, திட்டமிட்டு ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றன. ஆனால் உண்மை நிலை என்ன?
இன்று உலகில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் பெரும் வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. அந்த நாடுகளிலெல்லாம் யாரும் இஸ்லாத்தை வற்புறுத்திப் பரப்பவில்லை.
இஸ்லாத்தின் கடவுள் கொள்கையான ஓரிறைக் கொள்கை, இந்த அறிவியல் யுகத்திலும் அசைக்க முடியாத அற்புதமாகத் திகழும் அல்குர்ஆன், அதைக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்களின் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பார்த்தே அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரர் ஹாஷிம் அம்லா என்பவர். இவர் தனது அணி கிரிக்கெட் விளையாடுவதற்காக எங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் ஐவேளைத் தொழுகையையும் விடாமல் கடைப்பிடிக்கின்றார். மது வினியோகம் நடைபெறுகின்ற எந்தவொரு விழாவிலும் அவர் பங்கேற்பது கிடையாது. அவருடன் விளையாடும் சக வீரர்கள் மது அருந்துதல் மற்றும் இதர கொண்டாட்டங்களில் ஈடுபடும் போது அவர் விலகியே இருப்பார். கேஸ்டல் லேஜர் என்ற பீர் கம்பெனியால் செலவுப் பொறுப்பேற்று வழங்கப்பட்ட ஆடைகளை அவர் அணிய மறுத்து விட்டார். இது எங்களுடைய உள்ளத்தைத் தொட்டு விட்டது என்று அவருடன் விளையாடும் சக வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல என்றாலும் அதிலுள்ள அனாச்சாரங்களால் அது வரவேற்கத்தக்க விளையாட்டும் அல்ல. இருந்தாலும் அதில் ஈடுபட்ட ஒருவர், மது அருந்தாமல் இருப்பது, தொழுகை உள்ளிட்ட மார்க்க விஷயங்களைக் கடைப்பிடிப்பதே இவ்வளவு ஈர்ப்பைப் பெறுகின்றது என்றால் குர்ஆனை முஸ்லிம்கள் முழுமையாகப் பின்பற்றினால் அல்லாஹ்வின் அருளால் உலகில் மாபெரும் புரட்சி மலர்ந்து விடும்.
சொல் பிரச்சாரம் மட்டுமே மக்களை ஈர்ப்பதில்லை. ஒருவர் மார்க்கத்தைப் பின்பற்றும் அந்தச் செயல்பாடு, அவரது ஒழுக்கம், ஈடுபாடு போன்றவை ஒரு செயல் பிரச்சாரமாகி விடுகின்றது.
அல்குர்ஆன் இறங்கிய இந்த அருள் மாதத்தில் நாம் நம்முடைய மார்க்கத்தை முழுமையாகக் கடைப்பிடித்து, அதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் இந்தத் தூய மார்க்கத்தை எடுத்துச் செல்வதற்கு உறுதியேற்போம்.
நன்றி:
ஏகத்துவம், ஆகஸ்ட் -2011& TNTJCOVAI
ஏகத்துவம், ஆகஸ்ட் -2011& TNTJCOVAI
Saturday, 30 July 2011
Monday, 25 July 2011
பொதுக் கூட்டம் _உடுமலை _15072011
இதில் சகோதரர் திருப்பூர் முஹம்மத் சலீம் அவர்கள் சமூகதீமைகள் எனும் தலைப்பிலும், சகோதரர் திருப்பூர் அஹ்மத் கபீர் அவர்கள்” இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்”எனும் தலைப்பில் ” பராத் ஒரு வழிகேடு “என்றும் உரையாற்றினார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர் .சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம்இந்த நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்டதால் பெருவாரியான பொதுமக்கள் இதன் மூலம் பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
posted by SM.YOUSUF
Subscribe to:
Posts (Atom)









