Thursday, 21 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - குழு தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 17-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக ஆண்கள்  தாவா  குழுவினர் வீடு வீடாகச் சென்று இணைவைப்பு குறித்து எடுத்துச்சொல்லி மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்தனர்....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல் வீரர்கள் கூட்டம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 17-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்தும் விதமாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வோம் என்ற தலைப்பிலும், மாவட்ட தலைவர் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவம் அதற்காக நாம் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் விளக்கினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....