Sunday, 20 July 2014
ரமளான் இரவு பயான் _ உடுமலை - 19.07.14
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 19.07.2014 அன்று ரமலான் முதல் ஒற்றை படை இரவில் "இஸ்லாமியரிடம் இருக்க வேண்டிய கவலைகள்" எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் M.I.SC., அவர்கள் உரை நிகழ்த்தினார். மேலும், அதைத் தொடர்ந்து "பிறமத தாஃவா பணி செய்வது எப்படி?" என்று பயிற்சியையும் ஆலோசனைகளையும் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்..
ரமளான் இரவு பயான் _ வடுகன்காளிபாளையம் - 18.07.14
திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 17.07.14 மற்றும் 18.07.14 ஆகிய இரு நாட்கள் இரவு தொழுகைக்கு பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.யாசர் அவர்கள் "ரமலானில் நடைபெறும் பித்அத்களும் நாம் நடைமுறை படுத்தும் சுன்னத்தான வழிமுறைகளும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
ஹதீஸ் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை
திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக 18.07.14 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள், அதிக நன்மைகளை தரும் சிறிய அமல்களை குறித்து புஹாரியில் 1410, 1442, 780, 3 227 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
ஆண்டியக்கவுண்டனூரில் ஹதீஸ் வகுப்பு...
திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக 17.07.14 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் அதிக நன்மை தரும் சிறிய அமல்கள் எனும் தலைப்பில் புஹாரியில் 2736, 445, 5827 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)