Wednesday, 28 December 2016
பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 21/12/16அன்று இடுவாய் பகுதியைச் சேர்ந்த கிறித்தவ சகோதரர்கள் சூர்யா,பாலு ஆகிய சகோதரர்களிடம் கிறித்தவம் குறித்தும் கிறித்தவத்திற்கும் ஈசா(அலை) (ஏசுவிற்கும்)எந்த சம்பந்தமுமில்லை என்பது குறித்தும் பைபிள் இறைவேதமில்லை என்பது குறித்தும் பைபிளின் ஆதாரங்களுடன் விளக்கப்பட்டது.ஓறிறைக் கொள்கை குறித்தும் தாஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது இதற்கு முன்பு பைபிளில் நபிகள் நாயகம்,இயேசு இறைமகனா,இதுதான்பைபிள் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
நபிவழி அடிப்படையில் ஜும்ஆ தொழுகை ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்
TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 21-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு காதர்பேட்டை பகுதியில் இன்ஷா அல்லாஹ் நபிவழி அடிப்படையில் ஜும்ஆ தொழுகை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். மாவட்ட பொருளாளர் சகோ. அப்துர்ரஹ்மான் நன்மையை ஏவுவோம். தீமையை தடுப்போம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இலவச இருதய மருத்துவ முகாம் பிளக்ஸ் பேனர் -கோம்பைதோட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 20/12/2016 அன்று வருகின்ற ஜனவரி 8 அன்று நடைபெறவிருக்கும் இலவச இருதய மருத்துவ முகாமிற்காக(தலைமை மருத்துவமனை ,காங்கியம் ரோடு,பெரிய கடை வீதி,வெங்டேஸ்வர நகர்) ஆகிய இடங்களில் (6*8 இரண்டு ஃபிளக்ஸும்,10*12இரண்டு ஃபிளக்ஸும்) வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!
Subscribe to:
Posts (Atom)