Thursday, 17 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக14-09-2015 அன்று சாதிக்பாஷா நகர் பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "மக்கா விபத்தில் பெற வேண்டிய படிப்பினை"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக14-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் ””ஆபாசம்”’ என்ற தலைப்பில் சகோ.ஜஃபருல்லாஹ்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


நிர்வாகிகளுக்கான தர்பியா - R.P நகர்


திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 14-09-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் "இணைவைப்பாளர்கள் அறுத்த இறைச்சியை உண்ணலாமா?"  என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

மனிதநேய குணம் - Ms நகர்

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 14-09-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இரத்தம் தர தன்னை  தொடர்புகொள்ளுங்கள்  என்று மனிதநேயத்தோடு  கூறிய  ராஜ்மோகன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - M.S.நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 14-09-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய ”’வீரசேகர் ””என்ற பிறமத  சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு”” முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்”” ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - Ms நகர்


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 14-09-15 அன்று சாரதாமணி என்ற பிறமத சகோதரியின் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக  A + இரத்தம் 1 யூனிட் திருப்பூர் குமரன் மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்..

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை கிளையின் சார்பாக 14-09-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  நடைபெற்ற "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."குர்பானி கொடுக்கும் போது குடும்பத்தாரும் இருக்க வேண்டும்  ? "என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்….

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 14-09-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  நடைபெற்ற  சிந்திக்கசில நொடிகள் தொடர் பயான் நிகழ்ச்சியில்"குர்பானி கொடுக்க தடுக்கப்பட்ட  பிராணிகள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்….


புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம் - காலேஜ்ரோடு

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 13-09-15 ஞாயிறு அன்று காலை 9-30மணி முதல் பகல் 1-00மணிவரை பூத்தார் தியேட்டர் அருகில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் என்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் இலவச புக் ஸ்டால் அமைக்கப்ட்டு வந்திருந்த பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான பல்வேறு தலைப்புகளில் இஸ்லாமிய நூல்கள் இலவசமாக வழங்கி தாஃவா செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மருத்துவர்கள் அனைவருக்கும் இஸ்லாம் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் மற்றும் பல இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது.இதில் சகோ-முஹம்மதுசலீம் இஸ்லாம் குறித்து விளக்கினார்.வந்திருந்த சகோதரர்களுக்கு சகோ-சலீம் Misc,சகோ-யாசர்அரபாத்,சகோ-அப்துல்வஹாப்,சகோ-முஹம்மதுசலீம் ஆகிய தாயீக்களால் சிறப்பான முறையில் தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மதரஸா மாணவர்களுக்கான பொதுஅறிவு கேள்வி பதில் நிகழ்ச்சி - Ms நகர்


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 13-09-15 அன்று மாணவரணி சார்பாக மதரஸா மாணவர்களுக்கான மார்க்கம் மற்றும் பொதுஅறிவு சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...