Wednesday, 19 December 2018

இணையில்லா இறுதிவேதம் திருக்குர்ஆன்* _ உடுமலை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 18-12-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ, ஃபஜுலுல்லாஹ் இணையில்லா இறுதிவேதம் திருக்குர்ஆன்* என்ற தலைப்பில் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

சோமனூர் சகோ. பால்ராஜ் அவர்களுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-12-2018 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த சகோ. பால்ராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும்
" முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

சகோதரியின் அவசர சிகிச்சைக்கு இரத்த தானம் -SVகாலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் எஸ். வி. காலனி கிளை சார்பாக ரேவதி மருத்துவமனையில் o+ve1யூனிட்இரத்தம் கலைவாணி என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்கு சகோதரர் கௌத்தம் என்பவரால் 18/12/2018 அன்று அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 17/12/18-அன்று உமேஷ் என்ற சகோதரர் மூலம் o+ ஒரு யூனிட் கஜேந்திரன் என்ற சகோதரருக்கு ரேவதி மருத்துவமனையில் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.