Friday, 12 August 2016
பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 09-08-2016அன்று கிறித்தவ சகோதரர் .சூர்யா அவர்களுக்கு கிறித்தவத்தின் திரித்துவக்கொள்கை தவறானது என விளக்கப்பட்டது.இஸ்லாத்தின் ஓரிறைக்கொள்கையும் விளக்கப்பட்டு இயேசு இறைமகனா?பைபிளில் நபிகள்நாயகம்,இயேசு சிலுவையில் அறையப்பட்டது உண்மையா? அல்லது கற்பனையா?,ஆகிய நூல்கள் வழங்கி தாஃவா செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 08-08-2016அன்று பிறமத சகோதரர் செந்தில் அவர்களுக்கு தாஃவா செய்து ** இஸ்லாம் தீவிரவாதத்துக்கு எதிரானது எனவும் இஸ்லாம் மனிதநேய மார்க்கம் எனவும் விளக்கப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் ** ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....
மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சந்திப்பு - கோம்பைத்தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக... 07-08-2016 ஞாயிறு அன்று மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சந்திப்பு நடைபெற்றது. நடைபெற்றது. இதில் ஆசிரியை. சுலைஹா அவர்கள் **கல்வியின் முக்கியத்துவம்** எனும் தலைப்பிலும் , ஆசிரியர் .சதாம் ஹுசைன் அவர்கள் ** மாணவ மாணவியரின் குறைகளும், தீர்வும் ** என்ற தலைப்பிலும், மாவட்ட மதரஸா பொறுப்பாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள் **மதரஸாவின் வழிமுறைகள்** என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். .... அல்ஹம்துலில்லாஹ்.....
முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) தனிநபர் தாவா - M.S.நகர்
திருப்பூர் மாவட்டம், M.S நகர் கிளை சார்பாக 08-08-16 அன்று காத்தீம் பீவி என்ற இஸ்லாமிய சகோதரியிடத்தில் முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு தகுதியானவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மட்டும் தான் அவரைத்தவிர யாரையும் மார்க்க விஷயங்களில் பின்பற்ற கூடாது என்பது பற்றி தாவா செய்து ...எதிர்வரும் ஜனவரி 2017 TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெற இருக்கும் " முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டிற்கு " வரும்படி அழைப்பு தரப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)