Saturday, 16 April 2011

கோவை பொதுக்கூட்டத்தில் அதிமுக குண்டர்கள் வெறியாட்டம் – விளக்கு பிடித்து ஆள்காட்டிய மமக SDPI தொண்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு மாநில பொதுச்செயலாளர் ரஹம்த்துல்லா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா திமுக கூட்டணியை TNTJ ஆதரிப்பது ஏன் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 9.45 மணியளவில் திடீரென அந்தக் கூட்டத்திற்குள் உருட்டுக்கட்டைகள் மற்றும் கற்களுடன் புகுந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த பெரிய ஸ்பீக்கரை கூட்டத்தினர் மீது பிடித்து தள்ள கூட்டத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
என்னவென்று சுதாரிப்பதற்குள் SDPI வேட்பாளர் உமர் தலைமையில் அங்கு வந்த மமகவின் பொருப்பாளர்கள் அங்கிருந்த விளக்குகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.
இந்த நேரத்தில் அதிமுக குண்டர்கள் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரின் வயரைப் பிடிங்கி விட அந்த இடமே இருளில் மூழ்கியது. மேடைக்கு முன்னாள் திரண்டிருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த கலவர சூழ்நிலையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பெண்களைச் சுற்றி அரணாக நிற்க அவர்கள் மீது பிளாஸ்டிக் சேர்களை தூக்கி அடித்து விட்டு பெண்கள் கூட்டத்திற்குள் நுழைந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த இஸ்லாமிய பெண்களை வெளியே சொல்ல முடியாத கொச்சை வார்த்தைகளால் திட்டி அவர்கள் மீதும் சேர்களைத் தூக்கி அடிக்க பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர்.
ஆனால் மாற்றானின் இந்த வேலைகளையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாத மமக மற்றும் எஸ்டிபிஐ ரவுடிகள் அவனை அடி, இவனை அடி ஒவ்வொருவர் மீதும் செல்போனின் விளக்கைப் பிடித்து காட்ட அவர்கள் காட்டிய ஒவ்வொருவர் மீதும் அதிமுக குண்டர்கள் வெறித்தனமான தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர்.
”மேடையில் உள்ளவன்களையும் அடியுங்கள்” என மமகவினருக்கு அதிமுக குண்டர்கள் உத்தரவிட அங்கே திரண்டிருந்த மமக SDPI ரவுடிகள் மேடையை நோக்கி சராமாரியாக கற்களை வீச ஆரம்பிக்க, மேடையின் மீது இருந்த பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா உள்ளிட்ட பல நிர்வாகிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஆனால் என்ன நிகழ்ந்தாலும் மேடையை விட்டு இறங்க மாட்டோம் என உறுதியாக நின்ற நிர்வாகிகள் இரத்தம் சொட்ட சொட்ட மேடையிலேயே நின்றனர்.
பெண்கள் அங்குமிங்கும் ஓடியதில் சில பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
ஆனால் பெண்களையும் குழந்தைகளையும் கூட பார்க்காமல் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அதிமுக குண்டகளின் செயலை, ஏவிவிட்ட நாய்களைப் போல அமைதிகாத்து தங்களின் எஜமான விசுவாசத்தைக் காட்டியது மமக.
தவ்ஹீத் ஜமாஅத்தின் திமுக ஆதரவு நிலையால் பெரும்பாண்மை முஸ்லீம்களின் வாக்கு திமுகவுக்கு மாறி திமுக கூட்டணி மக்கள் மத்தியில்  செல்வாக்கு பெற்று வருவதால் வெறுப்படைந்த அதிமுகவினர் இவர்களின் பிரச்சாரத்தை கெடுத்த பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா மீது கொலை வெறித்தாக்குதல் நடத்த வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டுள்ளனர்.
ஆனால் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினால் அது மதப்பிரச்சனையாக மாறி விடும் என பயந்த அதிமுகவினர் அவர்களின் இன்றைய அடிமைகளான மம கட்சியை ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவழைத்து, முஸ்லிம்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற அதிமுகவின் திட்டத்தை சொல்லியது.
எஜமானனின் திட்டத்தில் இஸ்லாமியனின் உயிர் போனாலும் பரவாயில்லை என்ற பாணியில் இதை ஏற்றுக்கொண்டு தங்களின் எஜமானிய விசுவாசத்தைக் காட்ட எத்தனித்த மம கட்சியினர் ஏற்கனவே தவ்ஹீத் ஜமாஅத் மீது வெறியில் இருந்த SDPI காரர்க்ளையும் இணைத்துக்கொள்ளலாம் என அவர்களின் யோசனையைச் சொல்ல இதை முழுமையாக ஒப்புக்கொண்ட அதிமுகவினர், அடுத்த கட்ட திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தார்கள்.
அதாவது பொதுக்கூட்டம் நடந்த சாரமேடு மெயின் ரோடு பகுதியில் இருந்த 6க்கும் மேற்பட்ட சந்துகளில் அதிமுகவின் குண்டர்கள் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் ஏற்கனவே கடும் போதையில் இருந்ததால் அவர்களுக்கு கொலைவெறி இன்னும் அதிகமாகவே இருந்தது.
அதிமுகவினர் சந்துகளில் குவிக்கப்பட அதன் அடுத்த சாலையில் SDPI யும் மமகவினரும் தங்கள் வாகனங்களில் தயாராய் இருந்தார்கள்.
கூட்டம் முடியும் நேரத்தில் உள்ளே புகுந்து அதிமுக குண்டர்கள் முதல் தாக்குதல் நடத்த துவங்க, பின்னர் செல்போன் லைட்டின் உதவியால் ஒவ்வொரு கிளை நிர்வாகியாக அடையாளம் காட்டப்பட்டு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
அத்தோடு மேடையை நோக்கி குண்டர்கள் வீசிய கற்கள் மேடைக்கு முன்னாள் கூடியிருந்த பெண்களின் பகுதியில் வந்து விழுந்தன. ஆனால் நல்லவேளையாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எவ்வித காயமும் ஏற்படாமல் வல்ல இறைவன் காத்துவிட்டான். முஸ்லிம்கள் மீது நடந்த தாக்குதல்களை விளக்கு பிடித்து முன்னின்று நடத்திய மமகவோ, SDPI யோ அங்கே நடந்த பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை.
இவர்கள் கூட்டங்களுக்கு இனி பெண்கள் வரக்கூடாது என்பதற்காகவே மாற்றார்கள் நடத்திய வெறியாட்டத்தை கொஞ்சமும் தடுக்காமல் தன் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தியது மமக.
காவல்துறைக்கு புகார் அளித்தும் உடனடியாக யாருமே வராததாலும், நம் ஜமாஅத்தின் உறுப்பினர்கள், பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற என்னத்தில் அமைதி காத்ததாலும் அதிமுக,மமக, SDPI யின் வன்முறை வெறியாட்டம் இரவு 11 மணி வரை நீடித்தது.
இரவு 11 மணிக்கு மேல் தன் படையினருடன் வந்த கமிஷ்னர் சைலேந்திர பாபுவிடம் 25 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டது.
அதிலே 11 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து நம் மக்கள் கலைந்து சென்றனர்.
கோவையில் அதிமுக தனியாக போட்டியிடுகிறது. அவர்களுக்கு மமக ஆதரவு அளிக்கிறது. அவர்களை எதிர்த்து எஸ்டிபிஐ போட்டியிடுகிறது. ஆனால் இவர்களின் எதிர்ப்பையெல்லாம் மறந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தாக்க வேண்டும் என்ற விசயத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.
அதிமுக பாஜகவின் ஊதுகுழல் என்று சொல்லி வந்த மமக இன்றைக்கு ஏகத்துவததை அழிக்க அதிமுகவோடும், எஸ்டிபியுடனும் கூட்டணி சேர்ந்திருக்கின்றனர்.
நம் சமுதாய ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்கு விளக்கு பிடித்து வழிகாட்டிய இந்த மமகவினரா நம் சமுதாய நலனை காக்கப் போகிறார்கள். சிந்தியுங்கள் இஸ்லாமிய சமுகமே! இவர்களை முழுமையாக புறக்கணித்து இவர்களின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.












































































































































































































































About the Author

மாமா கட்சி வேட்பாளர் விஜய்யுடன் சந்தி(சிரி)ப்பு



அரசியலுக்கு போய் விட்டால் எப்படி வேண்டுமானாலும் வளையலாம் வெளியலாம் குலையலாம் பதவி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஈமான் எப்படி போனாலும் பரவாயில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக நம் சமுதாய மான்ம் காக்க புறப்பட்டு சந்தி சிரித்துப் போன மானங்கெட்ட மாமா கட்சியினரின் அடுத்த அவதாரம் தான் வேட்பாளர் தமிமுன் அன்சாரி நடிகை விஜய்யை சந்தித்து பொன்னாடை போர்த்திய நிகழ்ச்சி. ஏற்கனவே ஓட்டுக்காக வாணியம்பாடி வாத்தியார் திருவாடுதுறை ஆதினத்திடம் ஆசி பெற்றதும், ஹைதர் அலி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான மனித சங்கிலியில் மழையில் நனைந்து கொண்டே பங்கேற்றதும் தொடர்கதையான நிலையில் நேற்றைக்கு மாமா கட்சியின் வேட்பாளர் தமிமுன் அன்சாரி நடிகர் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி பேந்த பேந்த முழித்த காட்சி இன்றைக்கு செய்தித் தாள்களில் சந்தி சிரிக்கிறது. சமுதாயமே! இவர்களையா நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்கள். சிந்திப்பீர். இதை அனைவருக்கும் பரப்புவீர்

அரசியல் போதையில் அல்லாஹ் வை மறந்த ஜவாஹிருல்லாஹ்! – கூட்டனி கட்சி தலைவர்கள் முன்பு இன்ஷா அல்லாஹ் வார்தையை மென்டுமுழுங்கி பாதியாக்கிய அவலம்!

கூட்டணி கட்சி தலைவர் முன்பு  ஜவாஹிருல்லாஹ் மேடையில் பேசும் போது இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையை சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு “இன்ஷா..” என்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டு அல்லாஹ் வை விட்டு விட்டு, அய்யய்யோ தெரியாமல் சொல்லி விட்டோமே என்று தட்டுதடுமாறும் காட்சி கோவையில் நடந்தேரியுள்ளது.









ஜால்றா ஜவாஹிருல்லாஹ் ஏன் இப்படி ஆனார் குழப்பத்தில் த.மு.மு.க வில் உள்ள தொண்டர்கள்



Download

அரசியல் போதையில் இவர்கள் படைத்த இறைவனையே மறந்து, இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையைச் மேடையில் உச்சரிக்வே வேட்கப்படும் நிலைக்கு சென்று  விட்டனர்.
மேலும் இவர்கள் மற்ற அரசியல் வாதிகள் போன்று சந்தர்ப்ப வாதிகள் என்பதை மீ்ண்டும் இறைவன் நிரூபித்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!
முஸ்லிம் என்று கூறி தங்களுக்கு ஓட்டுகேட்க இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை!.