Wednesday, 20 March 2013

"இதுதான் இஸ்லாம்" _உள்ளூர் கேபிள் டி.வியில்மார்க்கவிளக்கநிகழ்ச்சிகள்தாவா _உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளைசார்பில் 

உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம்  தூயஇஸ்லாமிய மார்க்கவிளக்கநிகழ்ச்சிகள் "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டு  தாவா செய்யப்படுகிறது.

மருத்துவஉதவி _உடுமலை -20032013

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 20.03.2013 அன்று
கோவை மாவட்டம்  ஆனைமலை சகோ.அப்துல்லாஹ் அவர்களின்மனைவியின் மருத்துவ செலவினக்களுக்காக  ரூபாய். 2000/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

வரதட்சணையாக பெற்றவற்றை திருப்பி வழங்கினார் _செரங்காடு சகோதரர் _17032013

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 17.03.2013 அன்று செரங்காடு பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்.ஷிஹாபுதீன் அவர்கள் ,
வரதட்சணை இறைவனின் கட்டளைக்கு விரோதமான வருவாய் என்பதை உணர்ந்து  , படைத்த இறைவனுக்கு பயந்து ,
தன் அறியாமைக் காலத்தில் தன் மனைவி குடும்பத்தாரிடம் வரதட்சணையாக பெற்ற 32 கிராம் தங்கம், ரூ. 40000/= ஆகியவற்றை, தான்
வாங்கிய மனைவி குடும்பத்தாரிடமே திருப்பி வழங்கினார்.
அல்லாஹு அக்பர்

சகோ.காளிதாஸ் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ பிலால் ஆக _செரங்காடு _19032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்  19.03.2013 அன்று  செரங்காடு பகுதியை சேர்ந்த சகோ.காளிதாஸ்  அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை பிலால்    என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

இறை அச்சம் _பெண்கள்பயான் _செரங்காடு _18032013

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 18.03.2013 அன்று செரங்காடு   குப்பாண்டபாளையம் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது.  
இதில் சகோதரர்.பசீர்  அவர்கள். "இறை அச்சம்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான சகோதரிகள் கலந்துபயன்பெற்றனர்.

பிறமத சகோதரி க்கு வாழ்வாதாரஉதவி _உடுமலை _18032013

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 18.03.2013 அன்று
உடுமலை பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரி.பிரேமலதா குடும்பத்தாருக்கு ரூபாய். 2000/= வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.