திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 6-8-17 மாவட்ட துணை செயலாளர் பசீர் அவர்கள் தலைமையில் மஃரிப் தொழுகைக்குப்பிறகு கிளை பொதுமசூரா நடைபெற்றது இதில் தாவாபணிகளை வீரியபடுத்தவும்.மற்றும் தணி,நபர் தாவாக்களை அதிகப்படுத்தவும் என அறிவுறுத்தினார்.மற்றும் காமராஜர் நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர் பேரணி நடத்துவது எனவும் முடிவுசெய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, 10 August 2017
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிலவேம்பு கசாயம் வினியோகம் - அவினாசி கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 06-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரமாக
நிலவேம்பு கசாயம்,, அவினாசி புதுபேருந்து நிலையத்தில் இரண்டு இடங்களிலும், வாணியர் வீதி அதை சுற்றி உள்ள பகுதிகளிலும். அம்மாபாளையம், தேவராயம்பாளையம் சிறு பகுதிகளிலும் வழங்கப்பட்டது. இதில் 3000பேருக்கு மேல் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 06-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரமாக
நோட்டீஸ் 800 அவினாசி புதுபேருந்து நிலையத்தில் இரண்டு இடங்களிலும், வாணியர் வீதி அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
சமுதாயப்பனி - யாசின்பாபு நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் நாள்:5-8-17 அன்று மக்கள் பயன்பெறும் வகையில் 1000 லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது,
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 06-08-2017 அன்று மக்கள் பயன்பெறும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது
தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/08/2017 அன்று மஃஹ்ரீப் தொழுகைக்கு பின் தெருமுனைபிரச்சாரம் ரம்யா கார்டன் பகுதியில் மாற்று மத சகோதரர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியில( இந்தியா சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பு என்ன) என்பதை குறித்து சகோதரர்.செய்யது இப்ராஹிம் அவர்கள் விளக்கமளித்து உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நிலவேம்பு கசாயம் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-8-2017 அன்று டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நிலவேம்பு கசாயம் தயார் செய்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் மற்றும் அருகில் உள்ள வெள்ளெஞ்செட்டிபாளையம் , புத்தூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் - 1500 பேருக்கு விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
மதரஸா மாணவர்கள் மதரஸாவிற்கு அழைப்பு - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/08/2017 அன்று பள்ளியின் மதரஸா மாணவர்கள் மதரஸாவிற்கு வராத மாணவர்களின் வீடு களுக்கு சென்று அவர்களின் பெற்றோர்களை சந்தித்து மதரஸா விற்கு அனுப்பி வைக்கும்மாறு வழியுறுத்தி தனிநபர் தாஃவா மாணவர்களின் இல்லாங்களில் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
சிறுபான்மை மாணவ,மாணவிகளுக்கான கல்வி உதவி முகாம் விழிப்புணர்வு நோட்டீஸ் -காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக /20/08/2017 அன்று மத்திய,மாநில அரசு வழங்கும் சிறுபான்மை மாணவ,மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை பெற்று தரும் முகாம் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது அது குறித்து 06/08/17/ அன்று .காங்கயம் முஸ்லீம் வீதியில் வீடுவீடாக சென்று இதன் முக்கியத்துவத்தை விளக்கி நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)