Saturday, 31 December 2011

பெண்களுக்கான பேச்சு பயிற்சி 22112011




TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக பெண்களுக்கான பேச்சு பயிற்சி
வகுப்பு கடந்த 22.11.2011 அன்று நடைபெற்றது. இதில் 21 பெண்கள் கலந்து கொண்டனர். இதில் சேலம் தௌஹீத் கல்லுரி முதல்வர் சகோ: M.I. சுலைமான் பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
posted by SM.YOUSUF

மருத்துவ உதவி




விபத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்
சகோ சிராஜுதீன் அவர்களின் மருத்துவ செலவினகளுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 5 ஆயிரம் கடந்த 21-11-2011 அன்று வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF

தவ்ஹீத் நூலகம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில்
கடந்த 22-11-2011 தவ்ஹீத் நூலகம் திறக்கப்பட்டது. இதில் புத்தகம் மற்றும் ஹதீஸ் நூல்கள் இடம் பெற்றுள்ளது.
posted by SM.YOUSUF

பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கோல்டன் டவர் கிளை கடந்த 21-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தஃபீக் அவர்கள் அழைப்பு பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

posted by SM.YOUSUF

நல்லொழுக்க பயிற்சி முகாம் 20-11-2011


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் எம்.எஸ் நகர் கிளையில் கடந்த 20-11-2011 அன்று ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் அப்துல்லாஹ் அவர்கள் கொள்கை உறுது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்,

posted by SM.YOUSUF

நிவாரண உதவி


திருப்பூரில் ஏற்பட்ட வெள்ளி நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் உடுமலை கிளை சார்பாக ரூபாய் 31,200 கடந்த 11-11-11 அன்று மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

posted by SM.YOUSUF

மருத்துவ முகாம் _13.11.2011


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக கடந்த 13.11.2011 ஞாயிறு அன்று மாபெரும் இலவச எலும்பு மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் 250 நபர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ். இதில் கலந்து கொண்டவர்களுக்கு 2000 ரூ மதிப்புள்ள நரம்பு மற்றும் எலும்பு வலிமை கண்டறியும் சோதனை இலவசமாக செய்யப்பட்டது.
மேலும் இதில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவினாசி MLA கருப்பசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
posted by SM.YOUSUF