திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக மே -2015 முழுவதுமாக திருப்பூர் குமரன் மருத்துவமனையில் 15 சகோதரர்களுக்கு அவசரத்தேவைக்காக 15 யூனிட் இரத்த தானம் வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 29/5/15 அன்று o+ அவசர ரத்ததானம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 30/5/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "ஷஅபான் பாதிக்குப்பின் நோன்பு நோற்கலாமா??"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 30.05.2015 அன்று பூபாலன் என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து
1. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
2. அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும்
3. மனிதனுக்கேற்ற மார்க்கம்
என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-05-2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது அசேன் அவர்கள் ரமலானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளையில் 29.05.2015 அன்று நபி வழி அடிப்படையில் புதிய ஜும்ஆ ஆரம்பம் செய்யப்பட்டது.. சகோ.
ஜமால் உஸ்மானி அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்..
... அல்ஹம்துலில்லாஹ் ...
திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 30.05.2015 அன்று பேக்கரியில் தனிநபர் தாவா செய்து இணை வைப்பு தகடு அகற்றம்
செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் MS நகர்கிளை சார்பாக 29-05-15 அன்று மருத்துவ ஆலோசனை கேட்டு வந்த ராதாகிருஷ்ணன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என வலியுறுத்தி அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் ! என்ற புத்தகமும், யார் இவர்? என்ற நோட்டிஸ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது