Friday, 15 February 2013

".பரேலவிகளுக்கு பதில்....."மார்க்க விளக்க சொற்பொழிவு _பெரியகடைவீதி _15022013


திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 15.02.2013 அன்று 
திருப்பூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சுன்னத் ஜமாஅத் எனும் பரேலவிகள்   மீலாது விழா எனும் பெயரில் இஸ்லாத்தில் இல்லாத அனாச்சாரங்களை நடத்தியதுடன் ,அவர்கள் செய்த காரியங்கள் நன்மை என்றும் தவ்ஹீத் ஜமாத்தினர்தான் வழிகேடர்கள் என்றும் பிரச்சாரம்செய்தனர்.
இந்த தவறான பிரசாரத்திற்கு  பதில் அளிக்கவும் தூய இஸ்லாத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லவும் ,திருப்பூர் M.K.M. ரைஸ்மில் காம்பவுண்ட்,தவ்ஹீத் மதரசாவில்"பரேலவிகளுக்கு பதில்"
 .எனும் நிகழ்ச்சி  நடைபெற்றது.
மாநில பேச்சாளர். சகோதரர். அஹமது கபீர் அவர்கள் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள் .

"காதலர் தினமா கற்பு கொள்ளையர் தினமா ? நோட்டீஸ் M.S. நகர் _13022013


திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை சார்பாக 13.02.2013 அன்று
"காதலர் தினமா   கற்பு கொள்ளையர் தினமா ? "எனும் நோட்டீஸ்  திருப்பூர் M.S. நகர் முக்கிய பகுதிகளில் இளைஞர்கள்,பெண்கள் மத்தியில் விநியோகம் செய்து சமூக சேவை மற்றும் தாவாசெய்யப்பட்டது.

"காதலர் தினம் சமூகசீரழிவு தினம் " _நோட்டீஸ் _தாராபுரம் _13022013



 



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 13.02.2013 அன்று
"காதலர் தினம்  சமூகசீரழிவு தினம் "எனும் நோட்டீஸ்  தாராபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் இளைஞர்கள்,பெண்கள் மத்தியில் விநியோகம் செய்து
சமூக சேவை மற்றும் தாவாசெய்யப்பட்டது.