Thursday, 28 January 2016
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனை பிரச்சாரம் - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 24-01-16 அன்று PAB நகர்,KNP சுப்பிரமணியம் நகர்,செரங்காடு சுன்னத் பள்ளி வீதி, குன்னங்கல்காடு ஆகிய 5 பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் misc ,சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ், சகோ.ரசூல்மைதீன் ஆகியோர் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - அவினாசி கிளை
திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 25-01-2016 அன்று புளியம்பட்டியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக இனைவைப்பு பற்றிய விழிப்புணர்வு குழு தாவா செய்து அதன் மூலம் ஹபீப் ரஹ்மான் என்ற சகோதரர் தனது கழுத்தில் உள்ள தாயத்தை கழற்றி எறிந்தார்.... அல்ஹம்துலில்லாஹ்....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல்வீரர்கள் கூட்டம் - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 24-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்தும் விதமாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் அழைப்புபணியின் அவசியம் என்ற தலைப்பிலும் ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் அதற்கு நாம் செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்தும் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
ஷிர்க் ஒழிப்பு மாநாடு -தெருமுனைக்கூட்டம் -யாசின்பாபு நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 24-01-16 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் சகோ.சதாம் ஹீசைன் அவர்கள் அன்பான அழைப்பு என்ற தலைப்பிலும்,மாநில பேச்சாளர் H.M.அஹமது கபீர் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் எதற்கு என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்,ஆண்களும்,பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - வாகனப்பிரச்சாரம்- தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 24-01-16 ஞாயிறு அன்று காலை தாராபுரம் சுற்றியுள்ள கிராமங்கள் 1)கரையூர் 2)கொளத்துபாளையம் 3)காளிபளையம் 4)இராமபட்டிணம்5)கொளுஞ்சிவாடி 6) உப்புத்துறைபாளையம்.ஆகிய பகுதிகளில் சென்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக ஆட்டோ மற்றும் இரு சக்கரவாகணம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பேரணி - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் சார்பாக 24-01-2016 அன்று வெங்கடேஸ்வரா நகர், பெரிய கடைவீதி, பெரியதோட்டம்,செரங்காடு ,,கோம்பைத்தோட்டம்ஆகிய கிளைகளை ஒன்றினைத்து மதரஸா மாணவ,மாணவிகளின் மூலம் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு பிரம்மாண்டமான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது...இதில் ஷிர்க் வகைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக மாணவ,மாணவியர் வேடங்களை அதிகமானோர் பார்த்து விழிப்புணர்வு பெற்றனர்..... அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)