Wednesday, 18 March 2015

"வருமுன் உரைத்த இஸ்லாம் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "வருமுன் உரைத்த இஸ்லாம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

சிங்கப்பூரில் இஸ்லாமிய சகோதரர்கள் 3 பேருக்குதனி நபர் தாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  18.03.2015 அன்று  சிங்கப்பூரில்   இஸ்லாமிய சகோதரர்கள் (சரீப்,இம்ரன்,அகமத்)  3 பேருக்கு   இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும்,இணை வைத்தல் பெரும் பாவம் என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது

நிறைவேறட்டும் இஸ்லாமிய சட்டம் _செரங்காடு கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 18/03/15அன்று அஸர் தொழுகைக்குபிறகு பயான் நடைபெற்றது  சகோ.உசேன் அவர்கள் நிறைவேறட்டும் இஸ்லாமிய சட்டம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்


"இஸ்லாமும் இணைவைத்தலும் " Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாமும் இணைவைத்தலும் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

வீண் விரையம் _ G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  18.03.2015 அன்று  G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி. சபாமா அவர்கள் "வீண் விரையம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சகாபாக்கள் வாழ்க்கை தரும் படிப்பினை _உடுமலை கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  17.03.2015 அன்று நடைபெற்றது. 

இதில், சகோதரி. நிஷாரா அவர்கள் "சகாபாக்கள் வாழ்க்கை தரும் படிப்பினை" என்ற தலைப்பில்,  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

பரிந்துரை பயன் தருமா?? _அலங்கியம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை 18.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்  பரிந்துரை பயன் தருமா?? எனும் தலைப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்கானFlex(6*4) _பெரியகடைவீதி கிளை


 
திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17.03.2015 அன்று,  இன்ஷாஅல்லாஹ் வரும் 22-03-2015 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்கான Flex(6*4) பொதுமக்கள் அதிகமாக கூடும் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டது.

சுன்னத் ஜமாஅத் ஹஜ்ரத்திற்கு என்னை கவர்ந்த ஏகத்துவம் "DVD _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-03-2015 அன்று சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்த சகோ. முஹம்மது நபீஸ் (ஹாபிழ்) அவர்களுக்கு " என்னை கவர்ந்த ஏகத்துவம் " என்ற தலைப்பில் DVD அன்பளிப்பாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"என்னை கவர்ந்த ஏகத்துவம் " _ வடுகன்காளிபாளையம் கிளை போஸ்டர்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-03-2015 அன்று  வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் DTP50  எடுத்து ஒட்டப்பட்டது..
  சுன்னத் ஜமாத்திலிருந்து ஏகத்துவ கொள்கையை ஏற்றுக்கொண்ட 43 உலமாக்களின் "என்னை கவர்ந்த ஏகத்துவம் " என்ற உரை   DVD  ரூ.5மட்டுமே எனும் போஸ்டர் ஊரெங்கும் ஒட்டப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்

2 பிறமத சகோதரர்களுக்கு தனிநபர் தாவா _Ms நகர் கிளை










திருப்பூர் மாவட்டம்  Ms நகர் 
கிளை சார்பாக 18-03-15 
அன்று 2 பிறமத 
சகோதரர்களுக்கு
இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா  
செய்யப்பட்டது .மேலும் 
"மனிதனுக்கேற்ற மார்க்கம் " "புத்தகங்கள் 2 இலவசமாக வழங்கப்பட்டது

“ இஸ்லாத்தின் பார்வையில் தொப்பி அணிவது " _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

 
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-03-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸ் பயான் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ இஸ்லாத்தின் பார்வையில் தொப்பி அணிவது " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

"ஸிராத்தல் முஸ்தகீம் " _Ms நகர் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-03-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "ஸிராத்தல் முஸ்தகீம்  " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் ....

இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் -பெரியகடைவீதி கிளை



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17.03.2015 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. பிலால் மற்றும் ராஜா அவர்கள், கலாச்சார சீரழிவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

தொழுகை _ செரங்காடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்


 திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 17.03.2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. அன்சர் கான் அவர்கள், தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இறைச்சமே ஒழுக்கத்தின் கேடயம் _செரங்காடு கிளை தினம் ஒரு தகவல் பயான்

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 17/03/15 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் பயான்  நடைபெற்றது .
 சகோ.உசேன் அவர்கள்   "இறைச்சமே ஒழுக்கத்தின் கேடயம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள் 4பேருக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  17.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள் 4பேருக்கு   இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம்தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது

இரண்டு இஸ்லாமிய சகோதரர்களுக்கு தனிநபர் தாவா _உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.03.2015 அன்று இரண்டு இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஏகத்துவம் பற்றியும், நபிவழி பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது...

பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்

இவ்வசனத்தில் (4:101) பயணத்தின் போது தொழுகையைச் சுருக்கித் தொழலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. எதிரிகளால் ஆபத்து ஏற்படும் என அஞ்சினால் நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்ளலாம் என்பது தான் அந்த நிபந்தனை.
இன்றைக்கு அச்சமில்லாத சூழ்நிலையிலும் பயணங்களில் நாம் தொழுகையைச் சுருக்குகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அச்சமில்லாத சூழ்நிலையில் மேற்கொண்ட பயணங்களிலும் தொழுகையைச் சுருக்கியுள்ளனர்.
இது இவ்வசனத்திற்கு முரணானது என்று சிலருக்குத் தோன்றலாம். ஏனெனில் அச்சமான சூழ்நிலையில் தான் தொழுகையைச் சுருக்கலாம் என்று குர்ஆன் கூறும் போது. அச்சமில்லாத நிலையிலும் தொழுகையைச் சுருக்கலாம் எனக் கூறுவது குர்ஆனுக்கே எதிரானது அல்லவா? என்று அவர்கள் கேள்வி எழுப்பலாம்.
ஆனால் உண்மையில் முரண் ஏதும் இல்லை. தொழுகையைச் சுருக்குதல் என்பது இரு வகைப்படும்.
* ஒன்று அச்சமான நிலையிலும், போர்க்களத்திலும் சுருக்குதல்
* மற்றொன்று அச்சமில்லாத போது சாதாரணப் பயணங்களில் சுருக்குதல்
இவ்விரு சுருக்குதலும் வெவ்வேறு வகையானவை.
அச்சமான நேரத்திலும், போர்க்களத்திலும் தொழுகையைச் சுருக்குவது என்றால் எல்லாத் தொழுகையையும் ஒரே ஒரு ரக்அத்துடன் முடித்தல் என்பது பொருள்.
நான்கு ரக்அத் தொழுகையானாலும், மூன்று ரக்அத் தொழுகையானாலும், இரண்டு ரக்அத் தொழுகையானாலும் ஒரு ரக்அத் தொழுதால் போதும்.
இதை அடுத்த வசனத்திலிருந்து (4:102) அறிந்து கொள்ளலாம்.
எனவே ஒரு ரக்அத்தாகச் சுருக்குதல் என்பது இவ்வசனம் கூறுவது போல் அச்சமான சூழ்நிலையில் மட்டுமே. அச்சமில்லாத நேரத்தில் ஒரு ரக்அத் ஆகச் சுருக்கினால் அது இவ்வசனத்திற்கு எதிரானதாகும்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரண பயணத்தில் ஒரு ரக்அத்துடன் சுருக்கவில்லை. மாறாக நான்கு ரக்அத் தொழுகையை மட்டும் இரண்டாகச் சுருக்கினார்கள். மற்ற தொழுகைகளைச் சுருக்கவில்லை.
இந்தச் சுருக்குதல் இவ்வசனத்துக்கு எதிரானதல்ல. இவ்வசனம் கூறாத இன்னொரு வகையான சுருக்குதலாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் வந்துள்ளது என்பதற்கான சான்றுகளை பொருள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளோம். அந்த அடிப்படையில் அவர்கள் சாதாரண பயணங்களின் போது சுருக்கினார்கள்.
சாதாரண பயணங்களில் சுருக்குதல் வேறு! அச்சமான நிலையில் சுருக்குதல் வேறு என்பதை விளங்கிக் கொண்டால் குழப்பம் வராது.
வேதம் மட்டுமின்றி வேதமல்லாத இறைச் செய்தியும் இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்படும் என்பதை விரிவாக அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 127, 128, 132, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளைக் காண்க!

"நயவஞ்சகரின் சூழ்ச்சிகள்" _திருப்பூர் மாவட்டம் குர்ஆன் வகுப்பு



 

திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.03.2015 அன்று மாவட்ட மர்கஸில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "நயவஞ்சகரின் சூழ்ச்சிகள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..