Tuesday, 9 July 2013

"மாறும் உலகில் மாறாத இஸ்லாம்"S.V.காலனி கிளை போஸ்டர்கள்



  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில்
இன்ஷாஅல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்,மெகா டிவியில் ஒளிபரப்பாகும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற நிகழ்ச்சிக்காகபோஸ்டர்கள் அச்சிட்டு  ஒட்டப்பட்டது 

V.K.P.கிளை நபி வழியில் தொழுகை,ஜும்மாஹ் மற்றும்இரவுத்தொழுகை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் vkp கிளையின் சார்பாக " புதிய ஜும்ஆ " vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
மேலும் ,இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் முதல் நாளிலிருந்து ஐவேளை தொழுகைகள் தொடர்ச்சியாக தினசரி vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
மேலும் ,இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் முதல் நாளிலிருந்து இரவு தொழுகை vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
இதில் ,பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது அல்ஹம்துலில்லாஹ்




  

"மாறும் உலகில் மாறாத இஸ்லாம்" மங்கலம் கிளை போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-07-2013 அன்று மங்கலம் பகுதிகளில்போஸ்டர் தாவா ,


இன்ஷாஅல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்,மெகா டிவியில் ஒளிபரப்பாகும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற நிகழ்ச்சிக்காக 500  லேம்ப் போஸ்டர்கள் அச்சிட்டு மின்கம்பங்கள் மற்றும் வீட்டு வாசல்களில் ஒட்டப்பட்டது 

இறைவனின் தூய்மையான பதிவேடு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09-07-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் இறைவனின் தூய்மையான பதிவேடு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

ரமலான் _V.K.P.கிளை நோட்டிஸ்தாவா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில்
08.07.2013 அன்று " ரமலான் " என்ற தலைப்பில் இன்றைய காலகட்டத்தில் ரமலான் மாதத்தில் பரவியுள்ள பித்அத்களை இனங்காட்டும் விதமாகவும் , மறைக்கப்பட்ட சுன்னத்தான செயல் முறைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் முகமாகவும் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரத்துடன் நோட்டிஸ் அடித்து(வடுகன்காளிபாளையம்) ஊர் முழுவதும் விநியோகம் செய்யது தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.......


"இது தான் இஸ்லாம் " _V.K.P.கிளை உள்ளூர் கேபிள் டிவி மார்க்க பயான்


Inline image 1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் கடந்த , இரண்டு மாதங்களாக (மே,ஜூன்) vkp யில் உள்ள உள்ளூர் கேபிள் டிவியில் தினமும் இரவு 08.30மணி முதல் 10.00மணி வரை "இது தான் இஸ்லாம் " என்ற மார்க்க பயான் நிகழ்ச்சி தினசரி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது (அல்ஹம்துலில்லாஹ்)

"நபிவழியில் நோன்பு மற்றும் இரவு தொழுகையின் சட்டங்கள்" _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08-07-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் "நபிவழியில் நோன்பு மற்றும் இரவு தொழுகையின் சட்டங்கள்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது