Tuesday, 1 July 2014

ரமளான் நோன்பு அட்டவணை 1000 விநியோகம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 30.06.2014  அன்று அல்குர்ஆன், ஹதிஸ் விளக்கங்கள் கொண்ட சஹர், மற்றும் இப்தார் நேரங்களை கொண்ட ரமலான் நோன்பு அட்டவணை 1000  விநியோகம் செய்யப்பட்டது.

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர்  கிளை சார்பாக  01.07.2014  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.கலீல் ரஹ்மான் அவர்கள், இதில் முக்கியமான  நோன்பின் சட்டங்கள் பற்றி விளக்கம் அளித்தார்.

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்காவுண்டனூர்  கிளை சார்பாக கடந்த 30.06.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் நோன்பின் சட்டங்கள் குறித்து விளக்கினார். 

அல்ஹம்துலில்லாஹ்..

பெரியகடை வீதி கிளை சார்பாக மதரஸா நிறைவு விழா நிகழ்ச்சி...

    டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக நடத்தப்படும் அல்மத்ரஸதுத் தவ்ஹீத் உடைய நிறைவு விழா நிகழ்ச்சி கடந்த 27.06.14 அன்று நடைபெற்றது. 

  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். 

இதில் மதரஸா மாணவர்கள் 50 பேரும், மாணவிகள் 32 பேரும், பொதுமக்கள் 170 பேரும் என மொத்தம் 252 பேர் கலந்து கொண்டார்கள். 


மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளும் (ஹாட் பாக்ஸ்), ஆறுதல் பரிசுகளும் ( 17 - ஜனஸா சட்டங்கள் புத்தம், 70 - டிபன் பாக்ஸ்) வழங்கப்பட்டன.  


அல்ஹம்துலில்லாஹ்...