Monday, 4 March 2019

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ரிஷி _திருப்பூர் மாவட்டம்


அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மர்கஸில் 3/3/2019 அன்று திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியை சார்ந்த சகோதரர் ரிஷி அவர்கள் நேரில் வந்து தனது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
தனது பெயரை ரபி என்றும் மாற்றிக் கொண்டார்.
இஸ்லாம் பற்றி பல்வேறு விளக்கங்களை ஆர்வமுடன் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் அவர்களிடம் கேட்டறிந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட செயற்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 03/03/2019 ஞாயிறு காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
அனைத்து கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் மற்றும் ஜமாஅத் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு வருங்காலத்தில் நமது தாவா செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைத்துக் கொள்ளலாம் என்று கருத்துக்கள், ஆலோசனைகள், வழங்கினார்கள்.
இதில் மாநில மேலாண்மை குழு தலைவர் சகோ. M.S. சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு வருங்கால தாவா பணிகளை வீரியப்படுத்த பல்வேறு ஆலோசனைகள், மற்றும் மக்களின் கருத்துக்களுக்கு விளக்கம் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்