Thursday, 19 May 2016
கோடைகால பயிற்சி - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளையின் சார்பாக 15-05-2016 அன்று கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோடை கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 30 மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர் - முஹம்மது பிலால் அவர்கள் " மார்க்க கல்வியின் அவசியம் " என்ற தலைப்பிலும் சகோதரர் - முஹம்மது சலீம் அவர்கள் ** குழந்தை வளர்ப்பு ** என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
கோடைகால பயிற்சி ** மதரசா ஆண்டு விழா - V.K.P கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-05-2016 அன்று கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் மதரஸா ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோடை கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 33 மாணவிகளுக்கு,மதரஸா மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)