Thursday, 15 June 2017
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை பகுதியில் இரண்டு வருட காலமாக ஆல் கிணறு பழுதடைந்து இருந்த நிலையில் M L A.குனசேகரன் அவர்களிடம் இப்பகுதியினுடைய மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 15.5.2017 அன்று கோரிக்கை வைக்கப்பட்டு 6:6:2017 அன்று ஆழ்கிணறு சரி செய்யப்பட்டது,
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு -M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 06-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் குளிப்பு கடமை தொடர்ச்சி சம்மந்தமாக நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை
திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 5-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "ஜனாஸாவின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 5-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்த 4 சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை
திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 4-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் ராஜா அவர்கள் "வானவர்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 4-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்த 4 சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)