Friday, 24 April 2015

தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை டிஸ்மிஸ் செய் - போஸ்டர்கள் _உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பில்  23/4/15 அன்று  என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5முஸ்லிம்களையும் படுகொலை செய்த தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் என்ற போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டது.

ஏகத்துவத்தில் இணைந்த ஆலிம்களின் உரை _1000 நோட்டிஸ் _ஜின்னாமைதானம் கிளை



 

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 24/4/15  அன்று சுன்னத்ஜமாத் மதரஸாக்களில் பயின்று ஏகத்துவத்தில் இணைந்த 30 க்கும் மேற்பட்ட ஆலிம்களின் உரை  எனும்  1000 நோட்டிஸ் ஜும்மாவிற்கு பிறகு அனைத்து பள்ளிவாசல்களிலும் விநியோகம் செய்யப்பட்டது.

"ஹதிஸ் " _அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 23-04-15 அன்று  இஷா   தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "ஹதிஸ் " குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 22/04/2015 அன்று  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. அஜ்மல் கான் அவர்கள் 368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது

எழுத்து வடிவில் திருக்குர்ஆன் _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 152.  எழுத்து வடிவில் திருக்குர்ஆன் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ். 

152. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை

இவ்வசனங்கள் (2:97, 4:153,. 6:7, 7:157, 7:158, 20:114, 25:5, 26: 195, 29:48, 75:16, 75:18, 87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று கூறுவோருக்கு மறுப்பாக அமைந்துள்ளன.
"எழுத்து வடிவில் தந்திருந்தாலும் இவர்கள் ஏற்க மாட்டார்கள்' என்று 6:7வசனத்தில் கூறப்படுவதில் "எழுத்து வடிவில் அருளப்படவில்லை' என்ற கருத்து அடங்கியுள்ளதை

" காளைக்கன்று " _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 23.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம்ஹுசைன் அவர்கள் " காளைக்கன்று " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"அல்லாஹூவை நினைவுகூர்தல் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அல்லாஹூவை நினைவுகூர்தல் "என்ற தலைப்பில் உரையாற்றினார்