Wednesday, 29 October 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் குறித்து செயல்வீரர்கள் கூட்டம்....




திருப்பூர் மாவட்டம்  தாராபுரம், அலங்கியம், தாராபுரம் 6வது வார்டு கிளை ஆகிய 3 கிளைகள் இணைந்து 26-10-2014 அன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் குறித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹம்மது சலீம்" (மாவட்ட பொருளாளர்) அவர்கள் பிரச்சராம் செய்வதின் அவசியம் குறித்தும் கூடுதல் ஆலோசனை வழங்கியும்  நிகழ்ச்சியை நடத்தினார். செயற்குழுவிற்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 
அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலை கிளை சார்பாக ஆலோசனைக் கூட்டம்....

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளையில் 26.10.2014 அன்று மர்கஸ் கட்டுமானப்பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சகோ.அஹமது கபீர் அவர்கள் மர்கஸ் கட்டுவதன் சிறப்பும் பயன்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
இதுவரை செய்த பணிகள் மற்றும் இனி  செய்யவேண்டிய பணிகளின் வழிமுறைகள் பற்றி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட சகோதர, சகோதரிகளிடம் விளக்கினார்கள். கலந்து கொண்டஅனைவரும் இந்த கட்டுமானப்பணிகளில் ஒத்துழைப்பு வழங்க உறுதி அளித்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்...

10 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - எஸ்.வி.காலனி சார்பாக...

திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளையின் சார்பாக 26.10.14 அன்று தீவிரவாத்திற்கு எதிராக தெருமுனைப் பிரச்சாரம் 10 இடங்களில் நடைப்பெற்றது. இதில், சகோ. பஷீர் அலீ மற்றும் சகோ. அப்துர் ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..


10 பேனர்கள் - எஸ்.வி.காலனி சார்பாக....

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 26-10-14அன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு 10 ஃபிளக்ஸ் பேனர்கள்  10 இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ். நகர் கிளை சார்பாக தனி நபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-10-14 அன்று ஜமிலா பானு என்ற சகோதரிக்கு "இறைவனிடம் கையேந்துவோம் " புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-10-14 அன்று பிரகாஷ் என்ற சகோதரருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

(3) எம்.எஸ். நகர் கிளையில் இஸ்லாத்தை தழுவிய குடும்பம் - அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக தாஃவா செய்யப்பட்டு 24-10-14 அன்று ஜெயராஜ் என்ற சகோதரர் தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். ஜெயராஜ். - அப்துல் ரஹ்மான் எனவும் , கவிதா -சாஜிதா எனவும், அஷ்வின் -முஹம்மது. எனவும் தங்களது பெயரை மாற்றிக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளைசார்பாக  25-10-2014 அன்று ஒரு சகோதரருக்கு தொழுகையின் அவசியத்தைப் பற்றி விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக மாணவர்களுக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   25-10-2014 அன்று பள்ளி மாணவர்களுக்கு தொழுகையின் அவசியத்தைப் பற்றி விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாவா

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   24-10-2014 அன்று முஸ்லிம் சகோதரர் ஒருவரிடம்  தொழுகையின் அவசியத்தைப் பற்றி விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-10-2014 அன்று  பள்ளி மாணவர்களுக்கு தொழுகையின் அவசியம் குறித்தும் இஸ்லாம் கூறும் ஒழுக்கத்தை குறித்தும் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   24-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது. இதில் ஹனீபா என்ற சகோதரர் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோ: அன்சர்கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - மங்கலம் கிளை மூலம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-10-2014 அன்று சலூன் கடையில் பணிபுரிகின்ற  பிற மத சகோதரர் ஒருவரிடம்  இஸ்லாம்  தீவிர வாதத்தை போதிக்கவில்லை என்பதை அவருக்கு  விளக்கப்பட்டது. மேலும் அர்த்தமுள்ள இஸ்லாம் எனும் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   24-10-2014 அன்று பிற மத சகோதரர் ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் இஸ்லாம்  தீவிர வாதத்தை போதிக்கவில்லை என்பதை அவருக்கு  விளக்கப்பட்டது. மேலும் அர்த்தமுள்ள இஸ்லாம் எனும் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக கயிறு அகற்றம்....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  23-10-2014 அன்று  சத்யா நகரில் பெண்கள் தாவா குழுவினர்கள் வீடு வீடாக சென்று இஸ்லாம் குறித்து  தாவா செய்தார்கள் . அதில் ஒரு சகோதரி அணிந்திருந்த இணைவைப்புக் கயிறு அகற்றப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

கயிறு அகற்றம் - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-10-2014 அன்று  சத்யா நகரில் பெண்கள் தாவா குழுவினர்கள் வீடு வீடாக சென்று இஸ்லாம் குறித்து  தாவா செய்து  ஒரு சகோதரி அணிந்திருந்த இணைவைப்புக் கயிறு அகற்றினர். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  23-10-2014 அன்று  சத்யா நகரில் பெண்கள் தாவா குழுவினர்கள் 12 வீடுகளுக்குச் சென்று தொழுகை சம்பந்தமான தாவா செய்து தொழுகை சம்பந்தமாக நோடீஸ் விநியோகம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்...