Saturday, 22 September 2018

சமூக அமைதியை நிலைநாட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்    சார்பாக   19/09/2018   அன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

விநாயகர் சதுர்தி ஊர்வலம் என்ற பெயரில்  இந்து முன்னனியினர்   சமூக ஒற்றுமை யை கெடுக்கும் விதமாக  இந்தியன்நகர் பகுதியில்  கலவரம் ஏற்படுத்த முயன்றனர்.    

அதுகுறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  இந்தியன் நகர் கிளை, மங்கலம் கிளை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் குழுவாக சென்று சமூக அமைதியை நிலைநாட்ட புகார் செய்யப்பட்டது.  

காவல்துறை சார்பில் தகுந்த நடவடிக்கை எடுத்து வருங்காலத்தில் இதுபோல ஏற்படாவண்ணம் பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

 அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனை பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பில் 17:9:18 திங்கள் இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ: இம்ரான் அவர்கள் "ஆசுரா நோன்பும் கர்பலாவும்" எனும் தலைப்பில் உரையாற்றினார். 
அல்ஹம்துலில்லாஹ்

பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்





திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 









SVகாலனி கிளை மர்கஸில்   (5 ஆவது வாரமாக)   16/09/2018  அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.




அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள். 
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்