Sunday, 24 May 2015

கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு பரிசளிப்பு _Ms நகர் கிளை




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு மாணவர்களின் எழுச்சி உரையுடன் நிறைவு பெற்றது. இதில் கலந்து கொண்ட 42 மாணவ ,மாணவியருக்கு பரிசளிப்பும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது

"மரண சிந்தனை " அவினாசி கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 24.05.15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் ""மரண சிந்தனை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

மத நல்லிணக்கமா?மனித நேய இலக்கணமா? _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 24/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "மத நல்லிணக்கமா? மனித நேய இலக்கணமா?" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்…

"எது ஏகத்துவம்?" _ms நகர் கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 24-05-15 ,அன்று தர்பியா நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ. கோவை அப்துர் ரஹீம் அவர்கள் "எது ஏகத்துவம்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

இணைவைப்பு பொருள் அகற்றம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24-5-2015 அன்று இணைவைப்பு பொருள் அகற்றம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்

கல்வி கற்பது கடமை _ வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24-5-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் உசேன் அவர்கள் கல்வி கற்பது கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்

இறை நம்பிக்கை அவசியம் _S.V காலனி கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் S.V காலனி  கிளை  சார்பாக 24.05.2015 அன்று தர்பியா (எ) நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது
சகோதரர்.
சதாம், அவர்கள் "இறை நம்பிக்கை அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 5பேருக்கு ஏகத்துவம் புத்தகம் வழங்கப்பட்டது

பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் தாயிக்கள் தேர்வு _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று கடந்த 15 வாரங்களாக நடைபெற்ற பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் தாயிக்கள் தேர்வு சகோ. மாநில பேச்சாளர் .கோவை அப்துர் ரஹீம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 6 சகோதரிகள் உரையாற்றினார்கள். இறுதியாக சகோ.அப்துர்ரஹீம் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு _ VSA நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை  சார்பாக 24/5/15 அன்று  கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு  நிகழ்ச்சி  நடைபெற்றது .
கடந்த 06.05.2015 அன்று முதல் 15.05.2015 வரை கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 
இதில் மாணவ,மாணவிகள் 21 பேர் கலந்துகொண்டு பயண்அடைந்தார்கள்
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்க்கு 2புத்தகங்கள் வழங்கி தாவா _S.Vகாலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.Vகாலனி கிளை சார்பாக 24-05-15 பிறமத சகோதரர். நாகராஜ்  அவர்களின்  இஸ்லாம்பற்றிய பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி    இஸ்லாம்ஓர் இனிய மார்க்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் ..?  ஆகிய  புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

4 பிறமத சகோதரர்களிடத்தில் புகையிலையின் தீமைகள் குறித்து தனிநபர் தாவா

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று 4 பிறமத சகோதரர்களிடத்தில் புகையிலையின் தீமைகள் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது. மேலும் இஸ்லாம் தீவிரவாத்த்தை போதிக்காக அமைதி மார்க்கம் பிறர்நலத்தை பேணக்கூடிய மார்க்கம் என வலியுறுத்திக் கூறப்பட்டது

"தொழுகையின் அவசியம்" பற்றி குழு தாவா _காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில்  24/5/15அன்று ஃப்ஜ்ர் தொழுகைக்குப் பிறகு   சகோ.முஹம்மது சலீம் தலைமையில் கிளை சகோதரர்கள் குழு ,  இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து "தொழுகையின் அவசியம்" பற்றி குழு தாவா செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...

"இப்ராஹிம் நபியின் உளத்தூய்மை" _ திருப்பூர் மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 24.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள் "இப்ராஹிம் நபியின் உளத்தூய்மை" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"நபிகள் நாயகம் (ஸல்) நேரத்தை எவ்வாறு கழித்தார்கள்? " _ Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நபிகள் நாயகம் (ஸல்) நேரத்தை எவ்வாறு கழித்தார்கள்? " என்ற தலைப்பில் உரையாற்றினார்

"அல்லாஹ்வின் வசனங்களை கேலி செய்யப்பட்டால் _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் நகர கிளையின் சார்பாக,24/5/15 (ஞாயிறு) அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது சுலைமான் அவர்கள்"அல்லாஹ்வின் வசனங்களை கேலி செய்யப்பட்டால் அங்கு நாம் என்ன செய்ய வேண்டும்" பற்றி விசயங்களை சொல்லி அதற்கான விளக்கத்தை அளித்தார்.

"அறுக்கப்பட்டதை உண்பது " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக,24/5/15 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமதுஅலி அவர்கள் "அறுக்கப்பட்டதை உண்பது " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்.

பிறமத சகோதரர்க்கு 1புத்தகம் வழங்கி தாவா_ M S நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M S நகர் கிளை சார்பாக 23-05-15 பிறமத சகோதரர். அழகு ராஜா  அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என வலியுறுத்தி அவருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது