Saturday, 12 April 2014

பிறமதசகோதரி.உமா வுக்கு புத்தகங்கள் வழங்கி தஃவா _ சிட்கோ (முதலிபாளையம்) கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளையின்   சார்பில் 12.04.2014  அன்று   பிறமதசகோதரி.உமா   அவர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து   ஏசு இறை மகனா = 1    அர்த்தமுள்ள கேள்விகளும், அறிவுபூர்வமான பதில்களும்=1     ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11.04.2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து இணைவைப்பு பொருள்கள்  அகற்றப்பட்டது

பிறமத சகோதரர். ராஜாவுக்கு ரூ.1700/= வீட்டு உபயோகப் பொருள்கள் வாழ்வாதாரஉதவி _சிட்கோ (முதலிபாளையம்) கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   சிட்கோ (முதலிபாளையம்) கிளையின்  சார்பாக 11.04.2014 அன்று  பிறமத சகோதரர். ராஜா அவர்களின் குடும்பத்திற்கு ரூ.1700/= மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருள்கள் வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்

"பெற்றோரை பேணுதல் " மடத்துக்குளம் கிளை 2 தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 11.04.2014 அன்று சோழமாதேவி கிராமத்தில் இரண்டு இடங்களில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "பெற்றோரை பேணுதல்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

அதிமுக ஆதரவு வாபஸ் ஏன்? _20140412



அதிமுக ஆதரவு வாபஸ் ஏன்? - முழுமையான விளக்க வீடியோ

அதிமுகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கி கொள்வதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

இதுக்குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில்....பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்திற்குஅதிமுக அரசு இட ஒதுக்கீட்டுக்காக கடிதம் எழுதிய காரணத்தினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தது.

அதேசமையம் பிஜேபி குறித்தும், மோடி குறித்தும் அதிமுக ஆதரவு நிலை எடுத்து வந்த ஒரே காரணத்தினால் அதிமுகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை TNTJ முழுமையாக வாபஸ் பெறுகிறது.

மேலும் அடுத்து என்ன நிலைபாடு எடுப்பது என்பது குறித்து வருகின்ற திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்பது என முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது...

ஏழை சகோதரர்க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.04.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.அப்துல்சலீம் க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

"நபிவழி தொழுகையும்,அதன் நன்மைகளும்" _தாராபுரம் 6வது வார்டு கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6வது வார்டு கிளை யின் சார்பாக 11.04.2014 அன்று சின்னபள்ளிவாசல் அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சல்மான் அவர்கள் "நபிவழி தொழுகையும்,அதன் நன்மைகளும்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

"மறதி" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக  12-04-14 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள்  "மறதி" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பாகப்பிரிவினையில் ஆண்,பெண் வேறுபாடு _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 12.04.2014 அன்று சகோ.அப்துல்ரஹ்மான் அவர்கள் "பாகப்பிரிவினையில் ஆண்,பெண் வேறுபாடு" _109 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.