திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 11.01.2015 அன்று பேச்சாளர்
பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு சகோ. எம்.
முஹம்மது சலீம் அவர்கள் பேச்சுப் பயிற்சி அளித்து, பேச்சுப் பயிற்சியின்
நோக்கமும் பயனும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 11.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் அபூபக்கர் எனும் சகோதரருக்கு தொழுகை கட்டாய கடமை, பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான நான்கு பக்கம் கொண்ட கட்டுரை தொகுப்பும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 10.01.2015 அன்று ஃபஜ்ருத்
தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது
சலீம் அவர்கள் தொழுகைக்குரிய ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு அந்தஸ்து எனும்
தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-01-15 அன்று கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த முன்னாள் கவுன்சிலர் பிறமதசகோதரர். EBஜெய கிருஷ்ணன் அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் .....?"புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-01-15 அன்று "மார்க்க கல்வியின் அவசியம் " பற்றி கிளை சகோதரர்கள் குழுவாக சென்று 35 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று குழுதாவா செய்தனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் Ms நகர்கிளைசார்பாக 11-01-15 அன்று மாணவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது .
சகோ .அன்சர்கான்.misc அவர்கள் பயிற்சி வழங்கினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் Ms நகர்கிளைசார்பாக 11-01-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 10.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. உமர்அவர்கள் 298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வரமுடியாது எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 9/1/15 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 6/1/15 அன்று 2வது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.
இதில் சகோ.யாசர் அவர்கள் சமூக தீமைகள் என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 4/1/15 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் பயான் நிகழ்ச்சி நடத்தப்படடது.
இதில் சகோ; H.m.அஹமது கபீர் அவர்கல் இஸ்லாத்தின் பார்வையில் பிறந்த நாள் விழா என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 4/1/15 அன்று காயிதே மில்லத் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.
இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் சமூக தீமைகள் என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.