தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 12/12/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் திருக்குர்ஆனின் அத்தியாயம் 27: 1-12 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டு அதற்க்கான விளக்கமளிக்கப்பட்டது, சகோதரர் - முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
Monday, 19 December 2016
இஸ்லாத்தை ஏற்றவர்கள் - M.S.நகர் கிளை
இஸ்லாத்தை ஏற்றார்வர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 11-12-16 அன்று சங்கர் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்,.அவருக்கு "திருக்குர்ஆன், மற்றும் " மனிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/12/2016 அன்று ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் மெளலூத் மார்க்கமா? என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபிக் அவர்கள் உரையாற்றினார். பிரச்சாரம் நடக்கும் பொழுது எதிர்ப்பு தெரிவிக்ககூடிய வகையில் சுன்னத் பள்ளி இமாம்கள் முடிந்த மெளலூதை மீண்டும் ஓதினார்கள் .ஆனால் அங்கிருந்த மக்கள் உண்மையை விளங்கிவிட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு வார இதழ் இலவசமாக வழங்கப்பட்டது - ஹவுசிங் யூனிட் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக வாராம் தோறும் ஒரு மாதமாக உணர்வு இதழ் நாச்சிப்பாளயம், முதலிபாளயம், ஹவ்சிங் யூனிட் ஆகிய பகுதிகளில் உள்ள 6 டீ கடைகளில் மொத்தம் 24 உணர்வுகள் இலவசமாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்,போட்டோ எடுக்கவில்லை
கிளை சந்திப்பு -திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை
கிளை சந்திப்பு : திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை(11/12/16) ஞாயிறு அன்று, திருப்பூர் TNTJ மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரசீது ஆகியோர் தாராபுரம் கிளை சந்திப்பு வந்தனர்,இதில் தனிநபர் தாவா அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் மற்றும் வாரந்தோறும் வரும் நமது ஜமாத்தின் உணர்வு மற்றும் மாதந்தோறும் வரும் ஏகத்துவம் அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் மற்றும் பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)