Thursday, 24 January 2013

பகிரங்க விவாத அறைகூவல் _கண்டன போஸ்டர்கள் _தாராபுரம் _23012013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக 23.01.2013 அன்று ,குற்றங்களுக்கு இஸ்லாம் வழங்கும் தண்டனைகள் பிற்போக்கானவை என உண்மைக்கு புறம்பாக கட்டுரை எழுதிய மனுஷ புத்திரன்,மற்றும் கட்டுரை வெளியிட்ட நக்கீரன்,ஆனந்த விகடன் ஆகியவை தமது கருத்தில் உண்மையாளர்களாக இருந்தால் விவாதம் செய்ய வாருங்கள் என TNTJ பகிரங்கஅறைகூவல் என்ற  கண்டன போஸ்டர்கள் தாராபுரம் நகர் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.

குர்ஆன் கிளாஸ் _மங்கலம் _20012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை
மாணவர் அணியின் சார்பாக 20-01-2013 அன்று குர்ஆன் கிளாஸ் நடைபெற்றது. தலைப்பு : ஜின்கள் ஓர் ஆய்வு

சுன்னத் வல் ஜமாத் கபர்ஸ்தானுக்கு நிதியுதவி _18012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக 18-01-2013 அன்று திருப்பூரில் உள்ள அனுபர்பாளையம் என்ற ஊரில் உள்ள சுன்னத் வல் ஜமாத்துக்கு சொந்தமான கபர்ஸ்தானில் சுற்று சுவர் கட்ட ரூபாய் 2600 நிதியுதவியை அந்த பள்ளி நிர்வாகியிடம் கொடுக்கப்பட்டது
(வாங்குபவர் வலது)  

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் _20012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 20-01-2013 அன்று காலை 08:00 மணி முதல் 09:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் சமீர் அவர்கள் பெற்றோரை பேணுவோம் என்ற தலைப்பிலும்,  இத்ரீஸ் அவர்கள் வெற்றியாளர்கள் யார்? உரையாற்றினார்கள்.

மவ்லித் ஓதினால் நிரந்தர நரகமே _மங்கலம் _17012013


   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக  17-01-2013 அன்று மவ்லித் ஓதினால் நிரந்தர நரகமே என்ற துண்டு பிரசுரம் ஆயிரம் பிரதிகள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.