Monday, 8 December 2014
இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் - எஸ்.வி.காலனி கிளை
திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளையின் சார்பாக 30-11-14 அன்று இரத்ததானம் மற்றும் இரத்தவகை கண்டறிதல் முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமில், 51 பேர் இரத்ததானம் செய்தனர். 89 பேருக்கு இரத்த வகை கண்டறியப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.....
மங்கலம் கிளை சார்பாக பேச்சாளர் பயிற்சி வகுப்பு...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் தவ்ஹீத் மர்கஸில் வைத்து பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது . 7-12-2014 அன்று காலை 10 மாணவர்கள் இவ்வகுப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்கள் . சகோ :அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் . அல்ஹம்துலில்லாஹ்...
சமூகப்பணி மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி - கோல்டன் டவர் கிளை சார்பாக...
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06/12/2014 அன்று மங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகள் சத்துணவு சாப்பிடுவதற்கு போதுமான தட்டுகுக்கள் இல்லாமல் சிரமப்படுவதாக கூறியதால் பள்ளி குழந்தைகளுக்கு அன்பாளிப்பாக இருபது சாப்பிடும் தட்டுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)