Thursday, 29 August 2013

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?

 பதில் :

 
இதுபோன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். 
 
எந்த ஒரு விவகாரமானாலும் அதில் நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது. 
 
ஒருவன் முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயம் செய்தால் அவன் முஸ்லிம் என்பதற்காக அவனை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. 
இறை மறுப்பாளனாக இருக்கும் ஒருவன் அநீதி இழைக்கப்பட்டால் அவன் இறை மறுப்பாளன் என்பதற்காக அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டக்கூடாது என்றும் இஸ்லாம் கூறவில்லை. 
 
பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதும் அநியாயம் செய்தவன் யாராக இருந்தாலும் அவனைக் கண்டிப்பதும் தான் நேர்மையானது. இது போன்ற விஷயங்களில் இஸ்லாம் நீதத்தைத் தவிர மதத்தைப் பார்ப்பதில்லை. 
 
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2) ளالمائدة : 2ன5 
 
மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒரு வருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். அல்குர்ஆன் (5 : 2) 
 
இஸ்லாம் அல்லாத வேறு கொள்கையில் இருப்பவர்கள் விஷயத்தில் நீதம் தவறக் கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.
 
 
 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (8) ளالمائدة : 8ன5 
 
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். அல்குர்ஆன் (5 : 8)
 
 لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8) ளالممتحنة : 8ன60 
 
 மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். 
 
அல்குர்ஆன் (60 : 8) 
 
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முஸ்லிமுக்கும் மாற்றுக் கொள்கையில் உள்ள ஒருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட போது நபியவர்கள் தன் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் முஸ்லிமுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கவில்லை. 
 
மாறாக நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டு ஆதாரங்களின் அடிப்படையில் தான் தீர்ப்பளித்தார்கள். இதைப் பின்வரும் சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன. 
 
3415 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ عَنْ اللَّيْثِ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَمَا يَهُودِيٌّ يَعْرِضُ سِلْعَتَهُ أُعْطِيَ بِهَا شَيْئًا كَرِهَهُ فَقَالَ لَا وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ فَسَمِعَهُ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَامَ فَلَطَمَ وَجْهَهُ وَقَالَ تَقُولُ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا فَذَهَبَ إِلَيْهِ فَقَالَ أَبَا الْقَاسِمِ إِنَّ لِي ذِمَّةً وَعَهْدًا فَمَا بَالُ فُلَانٍ لَطَمَ وَجْهِي فَقَالَ لِمَ لَطَمْتَ وَجْهَهُ فَذَكَرَهُ فَغَضِبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ ثُمَّ قَالَ لَا تُفَضِّلُوا بَيْنَ أَنْبِيَاءِ اللَّهِ فَإِنَّهُ يُنْفَخُ فِي الصُّورِ فَيَصْعَقُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَى فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ فَإِذَا مُوسَى آخِذٌ بِالْعَرْشِ فَلَا أَدْرِي أَحُوسِبَ بِصَعْقَتِهِ يَوْمَ الطُّورِ أَمْ بُعِثَ قَبْلِي وَلَا أَقُولُ إِنَّ أَحَدًا أَفْضَلُ مِنْ يُونُسَ بْنِ مَتَّى رواه البخاري 
 
யூதர் ஒருவர் (சந்தையில்) தன் சரக்கை எடுத்துக் காட்டிய போது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. 
உடனே அவர், "(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டு விட்டார்.
 உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, "மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!' என்றா நீ கூறுகிறாய்?'' என்று கேட்டார். 
உடனே அந்த யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, "அபுல் காசிம் அவர்களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?'' என்று கேட்டார். 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, "நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?'' என்று கேட்டார்கள். அவர் நடந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கினார். 
உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, "அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே ("ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்' என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களீல் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நான் தான் முதல் ஆளாக இருப்பேன். அந்த வேளையில் மூசா (அலை) அவர்கள் இறை சிம்மாசனத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். "அவர்கள் "தூர்சினாய்' மலையில் இறைவனைச் சந்தித்த) நிகழ்ச்சியின் போது மூர்ச்சையாகி விழுந்தது கணக்கிலெடுக்கப் (பட்டு இங்கு அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப் பட்டு விட்டாரா?' என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களை விட ஒருவர் சிறந்தவர் என்று நான் கூற மாட்டேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் ; புகாரி (3414) 
 
மேற்கண்ட சம்பவத்தில் முஸ்லிம் மூசா நபியை விட தன்னை சிறப்பித்துப் பேசியதால் அவர் செய்ததை நபியவர்கள் ஆதரிக்கவில்லை. மாறாக தனது கோபத்தை வெளிப்படுத்தி அவர் நடந்துகொண்ட விதத்தைக் கண்டிக்கின்றார்கள். நபிமார்களில் ஒருவரை விட மற்றவரை சிறந்தவர் என்று கூறுவது கூடாது. இந்தத் தவறை முஸ்லிமும் செய்துள்ளார். யூதரும் செய்துள்ளார். எனவே நபியவர்கள் அவ்விருவர் செய்ததையும் கண்டிக்கும் வகையில் உபதேசம் செய்கிறார்கள். 
 
ஒரு முஸ்லிமுக்கும் யூதருக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம் தன் இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கவில்லை. மாறாக ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பையே அளித்தார்கள்
 
 
2417حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهُوَ فِيهَا فَاجِرٌ لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ قَالَ فَقَالَ الْأَشْعَثُ فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنْ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَكَ بَيِّنَةٌ قُلْتُ لَا قَالَ فَقَالَ لِلْيَهُودِيِّ احْلِفْ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا إِلَى آخِرِ الْآيَةِ رواه البخاري 
 
"ஒருவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்வானாயின், மறுமையில், தன் மீது கோபம் கொண்ட நிலையில் அல்லாஹ்வை அவன் சந்திப்பான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது கேட்டுக் கொண்டிருந்த அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
 
எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்து விடவே நான் நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். நான், "இல்லை'' என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, "(அப்படியென்றால் "நிலம் என்னுடையது தான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை' என்று) சத்தியம் செய்'' என்று கூறினார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறென்றால் அந்த யூதன் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவானே!'' என்று கூறினேன். உடனே பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்., 
 
"எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்றுவிடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கின்றது
 
 (3:77) 
 
புகாரி (2417) 
 
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் நாம் யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற கேள்விக்கு இப்போது வருவோம். அப்படியொரு சூழல் வந்தால் யாரிடம் நியாயம் இருக்கின்றதோ அவர்களை ஆதரிப்போம். அக்கிரமக்காரர்களைப் புறக்கணிப்போம்.  
 
இந்தியா பாகிஸ்தான் மட்டுமின்றி எந்த நாடாக இருந்தாலும் இந்த அளவுகோலின் அடிப்படையிலேயே நாம் முடிவெடுப்போம். 
 
பாகிஸ்தானைப் பொறுத்தவரை அது பெயரளவில் தான் இஸ்லாமிய நாடாக உள்ளது. அங்கே இஸ்லாமிய ஆட்சியோ அதை ஆளக்கூடியவர்களிடம் இஸ்லாமோ இல்லை. உலக ஆதாயத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு அமெரிக்காவின் கைகூலிகளாக செயல்படுகிறார்கள். நாட்டின் நிர்வாகத் துறையில் இந்தியாவை விட மிக மோசமான நிலையிலேயே பாகிஸ்தான் உள்ளது. 
 
ஒரு வாதத்துக்காக முஸ்லிம் நாடு என்று வைத்துக் கொண்டாலும் அந்தக் காரணத்துக்காக அதை ஆதரிக்க முடியாது ஒருவன் முஸ்லிமாக இருப்பதுடன் அவனுடைய செயல்பாடுகள் முயற்சிகள் இஸ்லாத்திற்காக இருந்தால் தான் அவற்றை ஆதரிக்க முடியும். அவனது செயல்பாடுகள் சுயலாபத்திற்காக இருந்தால் அல்லது தேவையற்றதாக இருந்தால் அதற்கு இஸ்லாமிய சாயத்தைப் பூசி ஆதரிக்க வேண்டியதில்லை. 
 
ஒரு முஸ்லிம் அமெரிக்க குடிமகனாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்கக் குடிமகன் என்பதற்காக அமெரிக்காவின் அத்துமீறல்களை ஆதரிக்கக் கூடாது. அமெரிக்கா செய்யும் நல்ல காரியங்கள் ஏதாவது இருந்தால் அதை மட்டும் தான் ஆதரிக்கலாமே தவிர அநியாயத்தை ஆதரிக்க முடியாது. 
 
அந்த அடிப்படையில் இந்தியாவின் நடவடிக்கை அநியாயமாக இருந்தால் அந்த அநியாயத்தை எதிர்க்கும் கடமை முஸ்லிம்களுக்கு உள்ளது. 
 
அதே நேரத்தில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கும் போர் நடந்து நியாய அநியாயங்கள் அடிப்படையில் முடிவெடுக்க முடியாத நிலை இருந்தால் அப்போது நாம் இந்தியாவின் பக்கம் தான் இருக்க வேண்டும். 
 
ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளான். 
 
அந்த அடிப்படையில் பாகிஸ்தான் நமது நாட்டின் மீது படை எடுக்கும் போது நாமும் நமது மக்களும் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நமது நாட்டின் பக்கம் தான் நிற்க வேண்டும்.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/india_pak_por_moondal/
Copyright © www.onlinepj.com

அல்லாஹுவை இவ்வுலகில் பார்க்க முடியாது! _காலேஜ்ரோடு கிளைகுர்ஆன் வகுப்பு

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 28.08.2013 அன்று காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.அப்துல் வஹாப்  அவர்கள் "அல்லாஹுவை இவ்வுலகில் பார்க்க முடியாது! " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.

மரணசிந்தனை _வடுககாளி பாளையம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்









TNTJ திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளை யின் சார்பாக 25.08.2013 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் "மரணசிந்தனை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தினசரி மக்தப் மதரசா மதரஸதுல்அக்ஸா _S.V.காலனி கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 26.08.2013 அன்று S.V.காலனி கிளை மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் ஆண்,பெண் குழந்தைகளுக்கான தினசரி மக்தப் மதரசா "மதரஸதுல்அக்ஸா" ஆரம்பம் செய்யப்பட்டது.

சகோதரி.ஜொஹ்ராபேகம் அவர்கள் பாடம் நடத்தி பயிற்சி வழங்குகின்றார்கள்.