Tuesday, 24 July 2018
லேம்ப் போஸ்டர் தாவா- தாராபுரம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 23-7-2018 அன்று
லம்ப் போஸ்டர்கள்
லம்ப் போஸ்டர்கள்
மக்கள் அதிகம் கூடும் இடங்களான சின்னகடைவீதி, பேருந்து நிலையம், ஆகிய இடங்களில் உள்ள கம்பங்களில் திருக்குர்ஆன் தமிழாக்கம் படிக்க ஆர்வமா ?
இலவசம்
என்ற தலைப்பில் லேம்ப் போஸ்டர்கள் முதற்கட்டமாக ஒட்டப்பட்டது.
இலவசம்
என்ற தலைப்பில் லேம்ப் போஸ்டர்கள் முதற்கட்டமாக ஒட்டப்பட்டது.
மகளிர் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்- மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் அன்ஸாரிய்யா மகளிர் இஸ்லாமிய கல்வியகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மங்கலம் கிளை சார்பில் 22-7-2018 அன்று ஞாயிறு மாலை 6-00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.
முதல் நிகழ்வாக கல்லூரி மாணவிகளின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் 1, ஏகத்துவம் 2, இணைவைப்பு 3, மார்க்க கல்வியின் அவசியம் 4, வரதட்சனை 5, இறை அச்சம்
6, திருக்குரான் மாநாடு ஏன்? ஆகிய தலைப்புகளில் 6 மாணவிகள் உரை நிகழ்த்தியது பொதுமக்கள் ஆர்வமுடன் கேட்கும் வண்ணம் அமைந்தது.
அடுத்து TNTJ மாநில செயலாளர் சகோ. முஹம்மத் கனி அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், TNTJ மாநில செயலாளர் சகோ. கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் சத்தியத்தில் சங்கமிப்போம் என்ற தலைப்பிலும், சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இதில் 1, ஏகத்துவம் 2, இணைவைப்பு 3, மார்க்க கல்வியின் அவசியம் 4, வரதட்சனை 5, இறை அச்சம்
6, திருக்குரான் மாநாடு ஏன்? ஆகிய தலைப்புகளில் 6 மாணவிகள் உரை நிகழ்த்தியது பொதுமக்கள் ஆர்வமுடன் கேட்கும் வண்ணம் அமைந்தது.
அடுத்து TNTJ மாநில செயலாளர் சகோ. முஹம்மத் கனி அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், TNTJ மாநில செயலாளர் சகோ. கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் சத்தியத்தில் சங்கமிப்போம் என்ற தலைப்பிலும், சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
சிறப்பான முறையில் இந்த பெண்கள் கல்வியகத்தை நடத்தும் ஆசிரியர்களுக்கு பரிசுகளும், ஒரு வருட கல்வியை நிறைவு செய்த மாணவியர்களுக்கு சான்றிதழ் பட்டமும், பரிசுகளும் வழங்கப்பட்டது.
நகரின் மையப்பகுதியில் பொதுக்கூட்டம் நடந்ததால் பிறமத மக்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கவனிக்கும் வகையிலும், 1000 த்திற்கும் அதிகமான கொள்கை சகோதர சகோதரிகள் கலந்து கொண்டும் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
சுவர்விளம்பரம் -SV காலனி கிளை
திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக....
சுவர் விளம்பரம்
சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
22/07/2018 அன்று SV காலனி கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில்
மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.
மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.
இலவச புக் ஸ்டால் - காதர்பேட்டை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 22.07.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் தாவா செய்யப்பட்டது.
இந்த புக் ஸ்டாலை பல பிறமத சகோதரர்கள் ஆர்வமாக பார்வையிட்டு இஸ்லாம் பற்றிய பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர்.
அவர்களுக்கு இஸ்லாம் மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
லேம்ப் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை
திருக்குர்ஆன் மாநாட்டுப்பணி திருப்பூரில் வீரியமாக....
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-7-2018 அன்று
நமது கிளை இல்லாத பிறமத மக்கள் நிறைந்து வாழும் சோமனூர் கிராமத்தில்
திருக்குர்ஆன் அனைவரும் படிக்க புரிய ஆர்வமூட்டும் வகையில்
மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதி, பேருந்து நிலையம், கிறித்தவ ஆலயங்கள் அருகிலும், மற்றும் பிறமத மக்கள் வசிக்கும் அதிகமான தெருக்களில் உள்ள கம்பங்களில்
திருக்குர்ஆன் தமிழாக்கம் வேண்டுமா ?
இலவசம்
இலவசம்
என்ற தலைப்பில் லேம்ப் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி - பெரியதோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியதோட்டம் கிளை சார்பாக பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி 20/ 07 /18 வெள்ளிக்கிழமை பெரியதோட்டம் பள்ளியில் மகிரிபுக்கு பின் நடைப்பெற்றது.
இதில் : பயிற்சியளித்தவர் ரஹ்மத் பல்லடம் (ஆலிமா)
மரணத்திற்கு பின் என்ற தலைப்பில் பயானும் ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதில் ஏராாமான பெண்கள் கலந்துக் கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)