Thursday, 3 March 2016
பிறமத தாவா - M.S.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 26-02-16 அன்று ஜெகநாதன் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
நபிவழி திருமணம் - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 26-02-16 அன்று தாராபுரத்தைச் சேர்ந்த சகோதரருக்கு நபிவழி அடிப்படையில் தாராபுரம் TNTJ மர்க்கஸில் திருமணம் நடைபெற்றது.மாவட்ட துணை செயலாளர் ஜெய்லானி(திருமண பொருப்பாளர்) இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.தாராபுரம் சேக்அப்துல்லா அவர்கள் நபிவழி திருமணம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
ஆலோசனைக்கூட்டம் - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 24-02-16-அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பொது மஷூரா நடைபெற்றது. இதில் மதரஸாவில் அதிக அளவில் மாணவ, மாணவிகளை சேர்ப்பது தொடர்பாகவும், தாவா பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும், குர்ஆன் ஓத தெரியாத சகோதரர்களுக்கு கிளையில் தினமும் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடத்த ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
Subscribe to:
Posts (Atom)