Monday, 23 December 2013

"ஜனவரி28 போராட்டம் எதற்காக?" _ வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை  சார்பாக 23.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சதாம் ஹுசேன் அவர்கள் "ஜனவரி28 போராட்டம் எதற்காக?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்.ஐசக்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _மங்கலம் R.P.நகர் கிளை


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை சார்பில் 23.12.2013 அன்றுகிளை நூலகத்திற்கு வந்திருந்த  பிறமத  சகோதரர்.ஐசக் அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  
 தஃவா செய்து  




திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இதுதான் பைபிள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தாவா பணி தர வரிசை பரிசளிப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22-12-2013 அன்று பெரியகடைவீதி கிளை மர்கஸ் வளாகத்தில் நடைபெற்ற செயற்குழுவில் கடந்த மாதங்களில் தாவா பணிகளை சிறப்பாக செய்த கிளைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாநிலம் வழங்கிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது... 

பரிசு பெற்ற கிளைகள்  
முதல் இடம் .......................மங்கலம் 

 இரண்டாம் இடம்.............தாராபுரம் 


 மூன்றாம் இடம்................உடுமலை

 நான்காம் இடம் ..............கோம்பை தோட்டம் 
ஐந்தாம் இடம் .................. மடத்துக்குளம்

குமரலிங்கம் ஏழை சகோதரருக்கு ரூ.1500/= மருத்துவஉதவி _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 22.12.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.1500/= மருத்துவஉதவி செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..

"சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் " _மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 23.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் " கம்பங்களில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது..
.

"மறுமை நாள் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 23.12.2013 அன்று சகோ.பீர் முஹம்மது அவர்கள் "மறுமை நாள் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் _கோம்பை தோட்டம் கிளை










 
  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 22-12-2013 அன்று கோம்பை தோட்டம் பகுதியில் உள்ள வீடுகளில்  இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம்  செய்து இரண்டு நபர்களிடத்தில் தாயத்து தொடர்பாக தஃவா செய்து தாயத்து அகற்றப்பட்டது 5  வீட்டின் முன் இருந்த திருஷ்டி பொருள்கள்,தகடு உட்பட இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது



" புறம் பேசுதல் " _வடுகன்காளிபாளையம் கிளைதர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 22-12-2013 அன்று வடுகன்காளிபாளையம் கிளை ("மஸ்ஜிதுர் ரஹ்மான் ") மர்கஸில் தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் " புறம் பேசுதல் " என்ற தலைப்பில்
உரையாற்றி பயிற்சிகள் வழங்கினார்கள்.. இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு பற்றி தஃவா _தாராபுரம் 6 வதுவார்டு கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வதுவார்டு கிளையின் சார்பாக 22-12-2013 அன்று இணைவைப்பு பற்றி  தஃவா செய்து  இணைவைப்பு கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

மத்திய அரசை கண்டித்து கண்டனபோஸ்டர்கள் _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 20-12-2013 அன்று உடுமலை நகரின் பிரதான பகுதிகளில்
ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும்
"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் மத்திய அரசை கண்டித்து  கண்டனபோஸ்டர்கள்  ஒட்டப்பட்டது...

"சுய பரிசோதனை" _S.V. காலனி கிளை தர்பியா


 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 22.12.2013 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. 



சகோதரர் அகமது கபீர் அவர்கள் "சுய பரிசோதனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்... 
ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்கள் கூட்டம்" _ நாளிதழ் செய்தி...



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22-12-2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்கள் கூட்டம்" பெரியகடைவீதி கிளை மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது ...

மாநில பொது செயலாளர் சகோ.கோவை ரஹமத்துல்லாஹ்  அவர்களும் 
சிறைசெல்லும் போராட்ட அவசியமும்,  இம்மை மறுமை நன்மைகளையும் தெளிவாக விளக்கியது கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் அமைந்தது... 
 
இந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளருக்கு மாநில பொது செயலாளர் சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் வழங்கிய பேட்டி video..
  நாளிதழ்களில் வந்த செய்தி...






சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்கள் கூட்டம் _திருப்பூர் மாவட்டம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22-12-2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்கள் கூட்டம்" பெரியகடைவீதி கிளை மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது ... திருப்பூர் மாவட்ட அணைத்து கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் மற்றும் பிரமுகர்கள்கலந்து கொண்டனர்.. 
மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக் அவர்களும்,
மாநில பொது செயலாளர் சகோ.கோவை ரஹமத்துல்லாஹ்  அவர்களும் 
சிறைசெல்லும் போராட்ட அவசியமும்,  இம்மை மறுமை நன்மைகளையும் தெளிவாக விளக்கியது கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் அமைந்தது... 



போராட்டதிற்கு இதுவரை செய்துள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து,   இனி செயல்பட வேண்டிய  வழிமுறைகளை விளக்கினார்கள்...

"முஸ்லிம்களே!விழித்தெழுங்கள்!!" _பெரியகடைவீதி கிளைபொது கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையின் சார்பாக 22-12-2013 அன்று நொய்யல் வீதியில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம் நடைபெற்றது ...



 


 அதில் சகோ.தவ்பீக் அவர்கள் "இஸ்லாத்தில் பார்வையில் சமூக பணிகள்" எனும் தலைப்பிலும் ,






சகோ.கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் "முஸ்லிம்களே! விழித்தெழுங்கள்!!" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்...







ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்...




ஓரினச்சேர்க்கைக்கு எதிரான போஸ்டர்கள் _தாராபுரம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 19-12-2013 அன்று  பிரதான பகுதிகளில் ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும்
"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் மத்திய அரசை கண்டித்து  கண்டனபோஸ்டர்கள்  ஒட்டப்பட்டது...


சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை ? _தாராபுரம் 6வது வார்டுதெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6வது வார்டு கிளை  சார்பாக 20.12.2013 அன்று ஜமால் புதூர் தெருவில்   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சதாம் ஹுசேன் அவர்கள் "சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை ?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _சிட்கோ கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ  கிளை சார்பில்  20-12-2013 அன்று சிட்கோ  பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.

"சலாம் கூறுதல் " மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21.12.2013 அன்று சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "சலாம் கூறுதல்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" _சிட்கோ கிளை கண்டன போஸ்டர்கள்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ  கிளை யின் சார்பாக 20-12-2013 அன்று ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும் மத்திய அரசே !
"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் கண்டனபோஸ்டர்கள் சிட்கோ நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டது...

"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!"_மங்கலம் R.P.நகர் கண்டனபோஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளையின் சார்பாக 19-12-2013 அன்று மங்கலம்  R.P.நகரின் பிரதான பகுதிகளில் ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும்
"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் மத்திய அரசை கண்டித்து  கண்டனபோஸ்டர்கள்  ஒட்டப்பட்டது... 

"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" _வடுகன்காளிபாளையம் கிளைகண்டனபோஸ்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று 
ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும் மத்திய அரசே !
"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் கண்டனபோஸ்டர்கள் நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டது...

பள்ளி தலைமை ஆசிரியை க்கு தஃவா _மாமனிதர் நபிகள் நாயகம் _மங்கலம் R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை சார்பில் 12.12.2013 அன்று பிறமத  சகோதரி. பள்ளி தலைமை ஆசிரியை அவர்களுக்கு தஃவா செய்து இலவசமாக மாமனிதர் நபிகள் நாயகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.