Wednesday, 3 September 2014

செயல் வீரர்கள் கூட்டம் - ஆர்.பி.நகர் கிளையில்....

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி. நகர் கிளை சார்பாக 02.09.14  அன்று மாவட்ட நிர்வாகிகள் சகோ. பஷீர் அலீ மற்றும் சகோ. ஷேக் ஃபரீத் ஆகியோரின் முன்னிலையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சியில் நடந்து முடிந்த  மாநில செயற்குழு முடிவுகள் குறித்தும், கிளையின் வருங்கால செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

சூனியம் குறித்து 50 போஸ்டர்கள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.09.14  அன்று சூனியத்தின் மூலமாக யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதை நிரூபிக்க நாங்களும் தயாராக இருக்கின்றோம் என்ற திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளின் பகிரங்க சவால் போஸ்டர் மக்கள் பார்க்கும் முக்கிய பகுதிகளில் 50 போஸ்டர்கள் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.9,000 வட்டி இல்லா கடனுதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.09.14  அன்று திண்டுக்கல் மாவட்டம், பழநி பகுதியைச் சேர்ந்த  சகோதரர். அப்துல்சலாம் அவர்களுக்கு  ரூ.9,000 வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாஸின் பாபு நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 02.09.14 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. தீன்  அவர்கள் பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

சூனியம் குறித்து 3 பேனர்கள் - வடுகன்காளிபாளையம் கிளை...

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை சார்பாக கடந்த 31.08.14 அன்று சூனியம் குறித்து 5*5 என்ற அளவில் மூன்று (3) பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

வடுகன்காளிபாளையம் கிளையில் பொதுக்குழு ...

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையில் கடந்த 31.08.14 அன்று கிளைப் பொதுக்குழு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ் மற்றும் துணைச் செயலாளர் ஷேக் ஃபரீத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக் குழுவில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..




புதிய நிர்வாகிகளின் விபரம் :

தலைவர் : பாஸித் - 9150323115

செயலாளர் : ரஃபீக் - 9150115236, 9943814137

பொருளாளர் : சிக்கந்தர் - 9043725871

து. தலைவர் : பாவா - 8973374858

து. செயலாளர் : நிஜாம் - 8925628137



சூனியம் குறித்து 20 போஸ்டர்கள் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக  02.09.14 அன்று சூனியம் குறித்து சவால் விடும் குர்ஆன் வசனம் அடங்கிய போஸ்டர்கள் மொத்தம் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - பெரிய கடைவீதி கிளை...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 31.08.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி ரஹமத்துன்னிசா அவர்கள் அன்றைய சஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...