Saturday, 27 July 2013

மாநில தலைமையகத்திற்காக நிதியுதவி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 26.07.2013அன்று ரூ.2000/=ஐ  TNTJ  மாநில தலைமையக செலவினங்களுக்காக
சகோ.பசீர்   வசம்  மங்கலம் கிளை நிர்வாகிகள்  நிதியுதவி   வழங்கினர்.

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 26.07-2013 அன்று இரவுத் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சுப்புராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   சார்பில் 26.07.2013 அன்று இஸ்லாமிய மார்க்கம் குறித்து அறிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட தலைமை மர்கசுக்கு வருகை தந்த  திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சார்ந்த  பிறமத சகோதரர்.சுப்புராஜ்  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர்நபிகள் நாயகம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,  அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் மனிதனுகேற்ற மார்க்கம், ஆகிய புத்தகங்கள்  வழங்கி மாவட்ட நிர்வாகிகள் இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்கள் வழங்கினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.