Thursday, 4 July 2013

உங்கள் ஊர்களுக்குரிய சஹர் மற்றும் இஃப்தார் நேரம்

தங்களது ஊர்களுக்குரிய சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் பின் வரும் இணையதளத்தின் மூலம் அதற்குரிய நேரத்தை தெரிந்து கொள்ளலாம்.
sc1
இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

மேற்கண்ட இணையதளத்தில் எப்படி அவரவர் தங்களது ஊர்களுக்குரிய அட்டவனையை பெறுவது என்பதை பார்ப்போம்.
Prayer times by city என்ற பகுதியில் தங்கள் ஊரின் ஆங்கில பெயரின் ஆரம்ப 3 அல்லது 4 எழுத்துக்களை கொடுத்து அதற்கு கீழ் உள்ள பெட்டியில் இந்தியாவை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இந்தியாவில் உள்ளவர்கள்)
முழு பெயரையும் ஆங்கிலத்தில் எழுதினால் நமக்கு தேவையான ஊர் கிடைப்பதில் சில நேரங்களி்ல் சிக்கல் ஏற்படும். காரணம், தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு spelling ஐ பயன்படுத்துவார்கள்.சில நேரங்களில் நமக்கு அவர்கள் எப்படி எழுதியுள்ளார்கள் என்பது தெரியாது.
இது போன்று நேரத்தில் ஆரம்பத்தில் இடம் பெறும் 3 அல்லது 4 வார்த்தைகளை கொடுத்தால் எளிதில் நமக்கு தேவையான ஊர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
சென்னை போன்ற மிகவும் பிரபல்யமான ஊர்களுக்கு முழு பெயரைம் கொடுக்கலாம்
உதாரணமாக தென்காசிக்கு எடுக்க வேண்டும் எனில்:
tenkasi

மேற்கண்டவாறு ten , India என கொடுத்து find கொடுத்தால் ten என ஆரம்பிக்கும் அனைத்து ஊர்களையும் காண்பிக்கும் .அதில் நமக்கு தேவையான தென்காசியை தேர்வு செய்து கொள்ளலாம்

tenkasi2

தென்காசியை தேர்வு செய்தவுடன் பின் வரும் பக்கம் இடம் பெறும்.

tenkasi3

இதில் நமக்கு தேவையான வருடம் அல்லது மாதத்தை தேர்வு செய்து கொண்டு அதற்கு பிறகு வரும் அட்டவனையை காபி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
அட்டவனையில் இடம் பெறும் சுப்ஹு நேரத்தை , சஹர் நேரமாகவும்  , மக்ரிப் நேரத்தை , இஃப்தார் நேரகமாகவும் கணக்கிட்டு கொள்ள வேண்டும்.
இதே வழி முறைகளை பயன்படுத்தி அனைத்து ஊர்களுக்கான தொழுகை நேரங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
சில நேரங்களில் ஒரே பெயரில் பல ஊர்கள் இடம் பெறும். அது போன்ற நேரத்தில் map city என்ற வசதியை பயன்படுத்தி நமது ஊரை எளிதில் தேர்வு செய்யலாம்.
உதாரணமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் என்ற ஊருக்கு அட்டவனை தேவை எனில் tir என கொடுத்தால்
same-name

மேற்கண்ட படத்தில் இரண்டு திருப்பத்தூர் இடம் பெற்றிருப்பதை நீங்கள் காணலாம். இதில் நமது ஊர் எது என்பதை அறிய map city ஐ தேர்வு செய்து மேப்பில் இடம்  பெற்றிருக்கும் அருகில் உள்ள ஊர்களை வைத்து எது நமது ஊர் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
சிறிய ஊர்களின் பெயர் சில நேரங்களில் இந்த இணையதளத்தில் இடம் பெற்றிருக்காது. அது போன்ற நேரங்களில் அருகில் உள்ள பெரிய ஊர்களின் பெயரைகளை கொடுத்து அட்டவனையை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த இணையதளத்தை பயன்படுத்தி சென்ற ஆண்டுகளுக்குரிய மற்றும் வரப்போகும் ஆண்டுகளுக்குரிய தொழுகை , சஹர் மற்றும்  இஃப்தார் நேரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு: இந்த இணையதளத்தை நேரங்களை அறிந்து கொள்வதற்காக மட்டுமே குறிப்பிட்டுள்ளோம் இதில் இடம் பெற்றுள்ள மற்ற செய்திகளுக்கும் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை
sourse : http://www.tntj.net/159882.html

நோன்பின் சிறப்பு _ பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 03.07.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் ராஜா அவர்கள் நோன்பின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்

மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 01.07.2013 அன்று திருப்பூர் பகுதியை சார்ந்த தாஜுதீன் என்ற சகோதரரின் எலும்புநோய்சிகிச்சைக்காக ரூ 7000/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

நோன்பின் சட்டம் _பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 03/07/2013 அன்று பெரியதோட்டம் 3வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.சபியுல்லா அவர்கள் நோன்பின் சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.