Tuesday, 21 March 2017

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு ஆலோசனை கூட்டம் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 15-3-17 அஸர் தொழுகைக்குப்பின் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு சம்மந்தமாக மஸ்ஜிதுல் அக்ஸாவில் மாவட்டத்தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்களின் தலைமையில் பெண்கள் ஒருங்கிணைப்புக்கூட்டம்  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


மாணவர் ஒருங்கினைப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 15/03/17/ அன்று இஷாவிற்கு பிறகு மாணவர் ஒருங்கினைப்பு நடைபெற்றது அதில் அல்லாஹ்வின் உதவியால் தாவா பணிகளை வீரியமாக செய்வோம் என்று மாணவர்கள் உறுதியளித்தனர் இதில் 30 மாணவர்கள் கலந்து. கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

**முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்)** தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின்  சார்பாக 15-03-2017 அன்று கே என் பி காலனி மற்றம் பெரியதோட்டம் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது,இதில்**முஹம்மதுர்  ரசூலுல்லாஹ் (ஸல்)** என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் மற்றும் ராஜா ஆகியோர்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 15-03-2017 அன்று வெங்கடேஸ்வரா  நகர் நகர் TNTJ. தகவல்  பலகை அருகில்  தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது,இதில்**முஹம்மதுர்  ரசூலுல்லாஹ் (ஸல்)** என்ற தலைப்பில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/03/2017 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில்  உறையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/03/2017 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி-  ஃபாஜிலா அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) என்ற  தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குழுதாவா- உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  15--03--17 அன்று பெண்கள் தாவாக்குழுவினர் வீடுவீடாக சென்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குறித்து தாவா செய்து ,மாநாட்டுக்கு அழைப்புகொடுத்தனர், நோட்டீஸ் விநியோகம், மற்றும் துஆ ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்ற பணிகளையும் செய்தனர், அல்ஹம்துலில்லாஹ்



தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 15-03-2017 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்** முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் ** என்ற தலைப்பில்  சகோ- அப்துர் ரஷீத் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்


பெண்கள் பயான் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 15/03/17 அன்று ஸ்டார் கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோதரி.ஆபிலா அவர்கள்** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டுப் பணிகள் ஆலோசனை கூட்டம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 14-03-17  அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டுப் பணிகள் குறித்து பெண்கள் குழு மசூரா நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை

கரும்பலகை தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 15-03-17 பள்ளிவாசல் முன்பு உள்ள கரும்பலகையில் அனைத்து மக்களும் படித்து செல்லும் வகையில் நபிகளாரின் நற்போதனை சம்பந்தமான ஹதீஸ் எழுதப்பட்டது.மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு" சம்பந்தமாகவும் எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா -அலங்கியம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக  15-03-17 அன்று  தாராபுரம் ஆறுமுகம் என்ற (ஜான்) அவர்களுக்கு அகிலத்துக்கும் ஒரு இறைவன் தான் என்றும் அவனுக்கு இணை யாரும் இல்லை என்றும் திருகுர்ஆன் இறை வார்த்தை அது இருதி தூதர் முகமது நபி ஸல் அவர்களுக்கு மீது அருளப்பட்டது என்றும் திருகுர்ஆனில் எந்த ஒரு முரன்பாடு இல்லை என்று திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு பெண்கள் குழு தாஃவா- இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக 15/3/2017/ அன்று பெண்கள் குழு தாஃவா வீடு வீடாக சென்று  முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு சம்பந்தமான முதல்கட்டம்மாக நோட்டீஸ் '25'வீடுகளை சந்தித்து மாநாடு அழைப்பு செய்துள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஹூலுல்லாஹ் (ஸல்) மாநாடு போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/3/2017/ அன்று முஹம்மதுர் ரஹூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்பந்தமாக முதல் கட்டமாக 50 ஐம்பது போஸ்டர் பல்லடம் ரோடு பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 15-03-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 15 நபர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 15-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் " எந்த நட்பும் உதவாத நாள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாடு குழுதாவா -காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 14-03-17 அன்று வெள்ளகோயில் மக்களை சந்தித்து மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கமளித்து மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


தெருமுனைப்பிரச்சாரம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 14-03-17 அன்று இரவு 08:30 மணிக்கு செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.இதில்,சகோதரர் முஹம்மது பிலால் அவர்கள் "மத்ஹப் ஓர் வழிகேடு"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 15-3-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "  சத்திய வேதம்**என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 15-3-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  யூஸுப் நபியின் இறையச்சம்**என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-3-17 சென்னியப்பன் என்கிற  மாற்றுமத சகோதரருக்கு  குர்ஆன் தமிழாக்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகங்கள் வழங்கி இஸ்லாம் குறித்து  தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்புகள் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 15/03/17 சுபுஹ் தொழுகைக்குப் பிறகு காலை6:30 மணிக்கு குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

** நபி ( ஸல்) வாழ்க்கை வரலாறு** பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 15/03/17_ அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில்**  நபி ( ஸல்) வாழ்க்கை வரலாறு** என்ற தலைப்பில் சகோ-அபூபக்கர் சித்திக் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது, இதில் சகோதரர்- சிகாபுதீன் அவர்கள்**  சொர்க்கம் நரகம் ** என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

** திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகள்** பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்**  திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகள்** என்ற தலைப்பில்  உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - பெரியகடைவீதி கிளை


கரும்பலகை தாவா :-  திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக போர்டில் 14-03-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டின் விளம்பரமும் குர்ஆன் வசனமும் எழுதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 14-03-2017 அன்று இரவு இரண்டு இடங்களில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டின் தொடர் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ அப்துல்லாஹ் MISC, மற்றும் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், உடுமலை கிளை சார்பாக 14/03/17_ அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு   தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது, இதில் சகோ.அப்துல்லாஹ்( உடுமலை) அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ். என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 14/03/17_ அன்று மஃரிபுக்கு பிறகு கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது, இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ். என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

** இறைவன் இருக்கின்றானா** பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/03/2017 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் - அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்** இறைவன் இருக்கின்றானா**  என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்  கிளையின்  சார்பாக 14-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

**நபிகளாரை பின்பற்றுவோம்** தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்  கிளையின்  சார்பாக 14-03-2017 அன்று வெங்கடேஸ்வரா  நகர் 3 வது வீதி  சத்தியா  நகர் பள்ளி முன்புறம்  தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது , இதில்**நபிகளாரை பின்பற்றுவோம்** என்ற தலைப்பில் சகோ- ஷாஹிது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


அவசர இரத்ததானம் +பிறமத தாவா - அலங்கியம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 14-03-2017  அவசர இரத்த தானம். கடதந்தூர் அன்பழகன்  அவர்களுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அம்ளிக்கை கிருஸ்டின் மருத்துவமனை சென்று இரத்த தானம் செய்யப்பட்டது. பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம் என்றும் அது அமைதியை போதிக்கும் மார்கம் என்று முஸ்லிம் தீவிரவாதிகளா??? என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


பிறமத தாவா - M.S.நகர்

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் சார்பாக 14-03-17 அன்று முருகன் என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைபிரச்சாரம் - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 12-03-2017 அன்று  பிலால் நகர்,ஜன்னதுல் பிர்தவ்ஸ் ஆகிய பகுதிகளில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ-ராஜா அவர்கள் மார்க்கத்திற்கு முரணான மத்ஹபுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்