Monday, 17 November 2014
பிறமத தம்பதியருக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-11-2014 அன்று வீரக்குமார் மற்றும் அவரது மனைவி சாந்திமதி என்ற பிறமத தம்பதியரிடம் இஸ்லாம் குறித்து இரண்டு மணி நேரம் தஃவா செய்யப்பட்டது அப்போது அவர்கள் இஸ்லாம் குறித்து கேட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது மேலும் அவர்களுக்கு அன்பளிப்பாக மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், இது தான் பைபிள் ஆகிய புத்தகங்களும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற டிவிடியும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
பிற மதத்தை சேர்ந்த 47 பேருக்கு புத்தகம் அன்பளிப்பு - கோல்டன் டவர் கிளை சார்பாக...
மாமனிதர் நபிகள் நாயகம் 10
மனிதனுக்கேற்ற மார்க்கம் 10
அர்த்தமுள்ள இஸ்லாம் 10
அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும் 10
இது தான் பைபிள் 7
அல்ஹம்துலில்லாஹ்....
தீவிரவாதத்திற்கு எதிராக 6 பதாகைகள் - கோல்டன் டவர் கிளை
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு 09-11-2014 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமின் போது தீவிரவாதத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ஆறு பதாகைகள் சிறுவர்கள் கையில் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
இரத்த தான முகாமில் 91 பேர் இரத்தம் கொடையளித்தனர் - கோல்டன் டவர் கிளை
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு 09-11-2014 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் 91 பேர் இரத்ததானம் செய்தனர் இதில் ஒரு பெண் காவல் அதிகாரி உட்பட ஆறு காவல்துறை அதிகாரிகள் இரத்ததானம் செய்தார்கள் என்பது குறிப்பிட தக்கது மேலும் பஞ்யாத்து அலுவலர்கள் இருவரும் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)