Thursday, 5 September 2013

சிறைக்குச் செல்லும் போராட்டம் _ திருப்பூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டதீர்மானங்கள் பற்றிய பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக மாநில பொது செயலாளர். கோவை ரஹமத்துல்லாஹ்  தலைமையில் மாவட்ட தலைவர் நூர்தீன், மாவட்ட செயலாளர்.ஜாகிர் அப்பாஸ்  முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட  அவசர மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

"வாய் திறக்காதது ஏன்?" _காங்கயம் கிளை கண்டன போஸ்டர்கள்

TNTJ திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை சார்பாக 01.09.2013 அன்று, 
காங்கயம் பகுதி முழுவதும் "வாய் திறக்காதது ஏன்?" எனும் தலைப்பில் விஸ்வருபம் படத்திற்கு கருத்துச்சுதந்திரம் வேண்டும் என்று பேசிய அறிவுஜீவிகள் (?) MADRAS CAFE படத்திற்கு வாய் திறக்காதது ஏன்?  என்ற வாசகங்களுடன் கூடிய கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

தனிநபர்தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 01.09.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சிக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்களின்  மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தனிநபர்தாவா செய்யப்பட்டது.

பெண்களுக்கான மக்தப் புதிய மதரஸா _தாராபுரம் கிளை

TNTJ திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளையில் பெண்களுக்கான புதிய மக்தப் மதரஸா 02.09.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சகோதரி. A.ஷாஹிதா பானு ஆலிமா அவர்கள் பாடம் நடத்த 
 இன்ஷா அல்லாஹ் வாரந்தோரும் திங்கள் to புதன் கிழமை ஆகிய நான்கு நாட்களும் மாலை: 3.00 to 4.00 மணி வரை பெண்களுக்கான மக்தப் மதரஸா நடைபெறும்.
அல்ஹம்துலில்லாஹ்

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _தாராபுரம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை யின் சார்பாக 01.09.2013 அன்றுமுதல்   பேச்சாளர் பயிற்சி வகுப்பு  வாரம்தோரும் ஞாயிறு மற்றும் புதன் ஆகிய இரு தினங்கள் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்

இருதய அறுவை சிகிச்சை அவசர இரத்த தேவைக்கு 2 யூனிட் ( O+) இரத்ததானம் _அலங்கியம்கிளை


 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்கிளை சார்பாக 03.09.2013 அன்று பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சகோதரர் அவர்களின்  இருதய அறுவை சிகிச்சை அவசர இரத்த தேவைக்கு கிளை சகோதரர்களால் 2 யூனிட் ( O+) இரத்தம் கோவை குப்புசாமி மருத்துவமனைக்கு சென்று வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்