Wednesday, 16 September 2015
மருத்துவ முகாம் - காலேஜ்ரோடு
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 13-09-15 ஞாயிறு அன்று காலை 9-30மணி முதல் பகல் 1-00மணிவரை பூத்தார் தியேட்டர் அருகில்"' புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம்"' நடைபெற்றது.இதில் என்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் இலவச புக் ஸ்டால் அமைக்கப்பட்டு வந்திருந்த பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான பல்வேறு தலைப்புகளில் இஸ்லாமிய நூல்கள் இலவசமாக வழங்கி தாஃவா செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மருத்துவர்கள் அனைவருக்கும் இஸ்லாம் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் மற்றும் பல இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது.இதில் சகோ-முஹம்மதுசலீம் இஸ்லாம் குறித்து விளக்கினார்.வந்திருந்த சகோதரர்களுக்கு சகோ-சலீம் Misc,சகோ-யாசர்அரபாத்,சகோ-அப்துல்வஹாப்,சகோ-முஹம்மதுசலீம் ஆகிய தாயீக்களால் சிறப்பான முறையில் தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்
திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 13-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்
" உண்மையை மறைக்காதீர்கள் '' என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
Subscribe to:
Posts (Atom)