Tuesday, 5 May 2015

தகுதியற்ற ஆட்சியாளர்களும் பாழ்படுத்தப்படும் அமானிதமும் _காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை  மர்கஸில் 5/5/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் தகுதியற்ற ஆட்சியாளர்களும் பாழ்படுத்தப்படும் அமானிதமும் இறுதிநாளின் அடையாளம் (புகாரி6496)எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்... 
6496. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), 'நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்.'

"மனப்பாடம் செய்வோம் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மனப்பாடம் செய்வோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

3பிறமதசகோதர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ்ரோடு கிளை



திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 4/5/15 அன்று 3பிறமதசகோதர்கள்.  குளிர்பானக்கடை  கார்த்திகேயன அவர்களுக்கும், அம்மன் மெடிக்கல் -ரஞ்சித் அவர்களுக்கும், செந்தூர் பேக்கரி  பாலமுருகன் அவர்களுக்கும் இஸ்லாம் மனிதநேய மார்க்கம் என தாஃவா செய்து முஸ்லிம்தீவிரவாதிகள் மற்றும் மனிதனுக்கேற்றமார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

ஸுர் ஊதப்படும் நாள் _ கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 04/05/2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் ஸுர் ஊதப்படும் நாள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

தூய்மை _தாராபுரம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 05.05.2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹமது சுலைமான்" அவர்கள்  தூய்மை என்பதற்கு விளக்கமளித்தார்கள்