Friday, 25 January 2019

மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு _ திருப்பூர் மாவட்டம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 24-1-2019 அன்று திமுக மாநில இளைஞரணி செயலாளர்  முன்னாள் அமைச்சர் சகோதரர். மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு அழைப்பு கொடுத்து, மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 

திருப்பூர் மாவட்ட அவசர செயற்குழு _ திருப்பூர் மாவட்டம்




மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு  இன்ஷாஅல்லாஹ் ஜனவரி 27 அன்று உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெறவுள்ளதை ஒட்டி  *திருப்பூர் மாவட்ட அவசர
செயற்குழு*  திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் *25/01/2019 வெள்ளி க்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்* நடைபெற்றது.


கிளை நிர்வாகிகள் மற்றும் வாகனங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில் திருப்பூர் மாவட்ட கிளைகளின் சார்பாக அழைத்து செல்லும் மக்களுக்கு உதவ, மாநில, மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு விளக்கம் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்