Tuesday, 17 September 2013

அல்லாஹ்வை அஞ்சுவோம் _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 14-09-2013 அன்று இந்தியன் நகர் வது வீதியில்  தெருமுனை பயான் நடைபெற்றது இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 16.09.2013 அன்று  ஏழை சகோதரரின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1000/=  வழங்கப்பட்டது.

சபை ஒழுக்கம் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "சபை ஒழுக்கம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

"குர்ஆன் கூறும் விஞ்ஞானம்" _மங்கலம் கோல்டன் டவர் கிளைதெருமுனை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-09-2013 அன்று இந்தியன் நகர் 2 வது வீதியில்  தெருமுனை பயான் நடைபெற்றது
 இதில் சகோ. பிலால் அவர்கள் "குர்ஆன் கூறும் விஞ்ஞானம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"மறுமை வாழ்க்கை" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 14-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.யாசர் அரபாத் அவர்கள் "மறுமை வாழ்க்கை" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

ஜனவரி 28சிறை செல்லும்போராட்ட பிரச்சாரப் பேரணி -பத்திரிக்கைகளுக்கு செய்தி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை சார்பாக 15.09.2013  அன்று காலை 5.45 முதல் இரவு 8.30 வரை திருப்பூர் ரோஜா மஹால் மண்டபத்தில் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மற்றும் பேச்சாளர்களுக்கான தர்பியா நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாம் கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் பல்வேறு அவசியமான முக்கிய தகவல்களை அறிந்து செயல்பட ஏதுவாக அமைந்தது.

இந்த பயிற்சி முகாம் பற்றியும்,எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட தீர்மானங்கள் பற்றி பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுக்கப்பட்டது.  


1. 2000  இருசக்கர வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி

வருகிற ஜனவரி 28அன்று கோவையில் நடைபெறவுள்ள சிறை செல்லும் போராட்டம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் 2000  இருசக்கர வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி திருப்பூர் மாவட்டம் சார்பில் நடத்தவேண்டும் என்றும் ......

2.இஸ்லாத்தினை தழுவுவோருக்கு இடஒதுக்கீடில் பாரபட்சம் நீக்கவேண்டும்

இந்து,கிருத்துவ,மற்றும் பிற மதத்திலிருந்து இஸ்லாத்தினை தழுவுவோருக்கு இடஒதுக்கீடு ரத்து செய்யக்கூடாது என்ற நீதிமன்ற உத்திரவை தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும்  என்றும்....

3.டெல்லி மாணவி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கவேண்டும்.

டெல்லி மாணவி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கிய உடனடியாக தண்டனை வழங்கவேண்டும்என்றும்...

4. திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கும் , தமிழகஅரசுக்கும் நன்றி..




கடந்த அன்று நடந்து முடிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில்  காவல்துறைக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த வருடம் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிக சரியான வகையில் நடவடிக்கை எடுத்து பொது அமைதியை ஏற்படுத்தி கொடுத்த திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கும் , தமிழகஅரசுக்கும் நன்ற தெரிவிக்கிறது என்றும்....

4.மது போதை மற்றும் புகை பிடித்தல் தீமை குறித்து விழிப்புணர்வு 

பொதுமக்களின் உடல் மற்றும் உள்ளக்கேடுகளை விளைவிக்கும் மது,மற்றும் புகை பற்றிய தீமைகளை குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது என்றும்.. 

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்

மதரசா பணிக்கு 50,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக16.09.2013 அன்று   
திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி  கிளை மதரசா பணிக்கு ஏற்பட்ட கடன் சுமையை சமாளிக்க   ரூபாய் 50,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

சிறை செல்லும் போராட்ட ஆலோசனை கூட்ட தீர்மானம்_தாராபுரம் கிளை _செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக  ஆலோசனை கூட்ட பத்திரிக்கை செய்தி

தாராபுரம் கிளை ஆலோசனை கூட்ட தீர்மானம்.


இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 28, அன்று கோவை மண்டலம் சார்பில் கோவையில் நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்திற்கு தாராபுரம் பகுதியிலிருந்து 5000 மேற்பட்டவர்களை அழைத்து செல்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இது பற்றிய செய்தி தினதந்தி 15.09.2013   பத்திரிக்கையில் அன்று வெளியானது.

TNTJ மாநில தலைமை நடத்திய திருப்பூர் மாவட்ட தர்பியா _திருப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை சார்பாக 15.09.2013  அன்று காலை 5.45 முதல் இரவு 8.30 வரை திருப்பூர் ரோஜா மஹால் மண்டபத்தில் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மற்றும் பேச்சாளர்களுக்கான தர்பியா நடைபெற்றது.



மாநில பொறுப்பாளர்கள் சகோதரர். E.முஹம்மது மற்றும் சகோதரர்.ஆவடிஇப்ராஹிம் ஆகியோர் மேற்பார்வையில் 

அதிகாலை பஜ்ர் தொழுகைக்கு பின் 05.45 மணி முதல் 7.30 மணி வரை   


 
சகோ.அப்துல் கரீம் அவர்கள் "கொள்கை விளக்கம் - வழிகெட்ட சலபி கொள்கை " எனும் தலைப்பிலும், 







09.00 மணி முதல் 10.30 மணி வரை
சகோ.அப்துந்நாசர் அவர்கள் "பிறையில் ஓர் யூதப்பார்வை " எனும் தலைப்பிலும்,



 

10.45 மணி முதல் 12.00 மணி வரை
சகோ.அப்பாஸ்அலி அவர்கள் "சூனியமும் ,அல்குர்ஆனுக்கு முரண்படும் ஹதிஸ்களும் " எனும் தலைப்பிலும்,





12.00 மணி முதல் 1.00 மணி வரை
சகோ.அல்தாபி  அவர்கள் "TNTJ நிலைபாடுகள்  " எனும் தலைப்பிலும்,



02.30 மணி முதல் 04.00 மணி வரை
சகோ.ரஹமத்துல்லாஹ் அவர்கள் "விவாதம்,நோட்டீஸ்,போஸ்டர் " எனும் தலைப்பிலும்,





 


 4.45 மணி முதல் 6.15 மணி வரை 
 சகோ.M.Iசுலைமான் அவர்கள் "நிர்வாக ஒழுங்குகள்  " எனும் தலைப்பிலும்,



 



7.00 மணி முதல் 7.15 மணி வரை   
சகோ.E.முஹம்மது அவர்கள் "கிலாபத்தும்,ஜிஹாதும்" என்ற DVD வழங்க உள்ளது குறித்து விளக்கம் வழங்கினார்.
 
 




7.15 மணி முதல் 8.30 மணி வரை 
சகோ.யூசுப் அவர்கள் "காவல்துறையை அணுகும் முறை "எனும் தலைப்பிலும் ,
பயிற்சிகள் வழங்கினார்கள்.



இந்த பயிற்சி முகாம் வல்ல இறைவனின் அருளால் கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் பல்வேறு அவசியமான முக்கிய தகவல்களை அறிந்து செயல்பட ஏதுவாக அமைந்தது.
  
அல்ஹம்துலில்லாஹ்