Thursday, 3 July 2014

மார்க்கம் அறிவோம் : ரமளானும் நம்பிக்கையாளர்களும்...

கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
               உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
ஆதாரம் : புஹாரி (1905)



حَدَّثَنَا عَبْدَانُ عَنْ أَبِي حَمْزَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ قَالَ بَيْنَا أَنَا أَمْشِي مَعَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
(بخاري 1905)

மார்க்கம் அறிவோம்: ரமளானும் நம்பிக்கையாளர்களும்...

கெட்ட பேச்சுகள் கூடாது

சச்ரவுகள் செய்யக் கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் "நான் நோன்பாளி!'' என்று அவர் சொல்லட்டும்! 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : புஹாரி (1904)


حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالصِّيَامُ جُنَّةٌ وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلَا يَصْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ .
(بخاري 1904)



அறிவற்ற காரியங்களை செய்யக் கூடாது



    நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால், நான் நோன்பாளி என்று இரு முறை கூறட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
ஆதாரம்: புகாரி (1894)



حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا
(بخاري 1894)

மார்க்கம் அறிவோம் : ரமளானும் நம்பிக்கையாளர்களும்...

இறையச்சம் தரும் காரியங்கள்


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

(திருக்குர்ஆன் 2 : 183)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (القرآن 183 : 2)

பொய் பேசுவது கூடாது
ஏமாற்றும் காரியங்கள் இருக்கவே கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
          யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : புஹாரி (1903)


حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ  (بخاري 1903)

சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி பேனர்கள்_உடுமலை கிளை


டிஎன்டிஜே  திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 30.06.14 அன்று  ரமலான் மாதம் முழுவதும்  மெகா டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து 4*2 அளவில் மொத்தம் 10 பேனர்கள் உடுமலை நகரின்  மக்கள் பார்க்கும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.....

அலங்கியம் கிளை சார்பாக சஹர் நேர நிகழ்ச்சி பேனர்கள்....


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக...

கடந்த 29.06.14 அன்று மெகா டிவி சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து... 


3*2 என்ற அளவில் மொத்தம் 5 பேனர்கள் அலங்கியத்தில் வைக்கப்பட்டன. 

அல்ஹம்துலில்லாஹ்..

நல்லூர் கிளை சார்பாக சஹர் நேர நிகழ்ச்சி பேனர்...

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக,  ரமலான் மாதம் முழுமதும் டிஎன்டிஜே நடத்தும் மெகா டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து பேனர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை  சார்பாக 03.07.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.
 அதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் பெற்றோர்களை சபிப்பது பாவம் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை  சார்பாக 02.07.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. அதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் நோன்பின் சட்டங்கள் பற்றி விளக்கினார். 

அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரருக்கு தாவா_மங்கலம் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 2-7-2014 அன்று  இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையைப் பற்றி பிற மத சகோதரர் ஒருவருக்கு தாவா செய்யப்பட்டது. 








மேலும் அவர் அணிந்திருந்த தாயத்து அகற்றம்  செய்யப்பட்டது. அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற     இரு புத்தகங்கள்  வழங்கப்பட்டன

அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக பெரியவர்களுக்கு குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 29/6/2014 அன்று குர்ஆன் ஓதத் தெரியாத பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி அவர்கள் அனைவருக்கும் குர்ஆன் படிக்கும் முறையை கற்று தந்து பாடம் நடத்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...