Wednesday, 13 February 2013

இஸ்லாத்தை ஏற்ற திருப்பூர் மேனகா _ஆயிஷா ஆக _திருப்பூர் மாவட்டம் _13022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 13-02-2013 அன்று திருப்பூர்  காந்தி நகர் பகுதியை சேர்ந்த பிற மத சகோதரி.மேனகா என்பவர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை ஆயிஷா  என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படைகளை திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜாகிர்அப்பாஸ்அவர்கள்  விளக்கம் அளித்தார்.(அல்ஹம்துலில்லாஹ்)

செரங்காடு மணிகண்டன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம் _12022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  
12.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் செரங்காடு  பகுதியை சேர்ந்த  பிற மத சகோதரர்.மணிகண்டன்   அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள்  இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து, வழங்கப்பட்டது.

"தொழுகையின் அவசியம் " _பெண்கள் தர்பியா _தாராபுரம் _10022013

தாராபுரம்  கிளை சார்பாக.  10.02.2013 அன்று
தாராபுரம்  கிளை மஸ்ஜிதுர்ரஹ்மான் மர்கஸில் பெண்கள் தர்பியா நடைபெற்றது. 
"தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில்
சகோதரி.குர்ஷித்ஆலிமா அவர்கள் பயிற்சி வழங்கினார்.

பெண்கள்பயான் _வெங்கடேஸ்வரா நகர் _10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 10.02.2013 அன்று மாலை வெங்கடேஸ்வரா நகர் மதரசதுத்தக்வா வில் பெண்கள்பயான் நடைபெற்றது. இதில் மதரசா ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
ஏராளமான பெண்கள் தமது குழந்தைகளுடன்
இந்த மார்க்க விளக்க சொற்பொழிவில் கலந்து கொண்டனர்.

சகோதரர்.ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா _உடுமலை _11022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.02.2013 அன்று
உடுமலை பிற மத சகோதரர்.ஸ்ரீனிவாசன்  அவர்களுக்கு
"திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது

சகோதரர்.ஜேம்ஸ் _க்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா _வெங்கடேஸ்வரா நகர் _11022013


TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பில் 11.02.2013 அன்று கிருத்துவ சமயத்தை சார்ந்த சகோதரர்.ஜேம்ஸ் என்பவருக்கு
"திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது .மேலும் அவருடைய சந்தேகங்களுக்கு பதில் கொடுக்கப்பட்டது.....
அல்ஹம்துலில்லாஹ்.....

சகோதரர்.ஆறுமுகம் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம், இஸ்லாமிய அடிப்படைபுத்தகங்கள் வழங்கி தாவா_திருப்பூர்மாவட்டம்_12022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  
12.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் M.S.நகர் பகுதியை சேர்ந்த 
பிற கொள்கைசகோதரர்.ஆறுமுகம்  அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமானமற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள்  இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து, வழங்கப்பட்டது.
(குறிப்பு:இவர் தீவிர பெரியாரிஸ்ட் இதன் காரணமாக இவருடைய வீட்டிற்க்கு பெரியார் இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார்.)