Sunday, 1 September 2013

சிறை செல்லும் போராட்டம் _ திருப்பூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டதீர்மானங்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 30.08.2013 அன்று மாநில பொது செயலாளர். கோவை ரஹமத்துல்லாஹ்  தலைமையில் மாவட்ட தலைவர் நூர்தீன், மாவட்டசெயலாளர்.ஜாகிர் அப்பாஸ்  முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட  அவசர மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. 

கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

1.சிறை செல்லும் போராட்டம்

  தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கா3.5%இடஒதுக்கீடு போதுமானதல்ல. அதை அதிகரித்து தருவோம் என முதல்அமைச்சர்.ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், இந்தியஅளவில் முஸ்லிம்களுக்கு தனியாக 10% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என நீதிபதி.ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற கோரி மத்தியஅரசை வலியுறித்தியும் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜனவரி 28 செவ்வாய்கிழமை கோவையில் நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்திற்கு, திருப்பூரில் இருந்து 50ஆயிரம் முஸ்லிம்களை அழைத்து செல்லவேண்டும்..

2. விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடவடிக்கை

வருகிற செப் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறும் விநா யகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சில தீயசக்திகள் செயல்படுவதால் கடந்தகாலங்களில் எடுத்த நடவடிக்கைகலை போல இந்த ஆண்டும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..

3. மின்வெட்டுக்கு தீர்வு வேண்டும்

திருப்பூர் பின்னலாடைதொழில் நலிவடைந்து வரும் நிலையில் கடந்த காலங்களைப்போல 5,6மணி நேர மின்வெட்டு காரணமாக தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொது மக்களின் அத்தியாவசியநலன் கருதி தீர்வு வேண்டும் ..


ஆகிய தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.


தனிநபர்தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 01.09.2013 அன்று S.V.காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று தனிநபர்தாவா செய்து ஜமாஅத் சார்பில் நடைபெறும் பெண்கள் பயான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது.