Tuesday, 31 July 2018

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 29/7/18 அன்று மாலை பெண்கள் பயான் நடைப்பெற்றது.

சகோதரி நிஷாரா(உடுமலை) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

உயிரைக்கொல்லும் புகையிலை MS நகர் கிளை 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

இதில் சகோதரர் அப்துர் ரஹ்மான் உயிரைக்கொல்லும் புகையிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் 

மேலும் மக்களுக்கு புகையிலை யின் தீமைகள்  சம்பந்தமாக 200 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது

மதரசா பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு - வெங்கடேஷ்வராநகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வராநகர் கிளையின் சார்பாக நடத்தப்படும் மதரஸத்துத் தக்வாவின் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி 29/07/2018 அன்று நடத்தப்பட்டது.
மதரசா சிறந்த முறையில் நடைபெற நல்ல ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

குழந்தை வளர்ப்பு _ பல்லடம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையின் சார்பாக 29/07/2018 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி......குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா மாணவ மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி -VKP




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-7-2018 அன்று அஸர் தொழுகைக்கு பின் கிளையில் இயங்கி வரும் சிறுவர் சிறுமியர் களுக்கான மக்தப் மதரஸாவின் மாதாந்திர பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ. யாசர் அரபாத் அவர்கள் " பெற்றோர்களின் கடமைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பிறகு மதரஸா சம்பந்தமாக பெற்றோர்களிடம் ஆலோசனைகள் பெற ப்பட்டது 
கடந்த ஒரு மாதமாக விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வந்த மாணவ மாணவிகள் என மொத்தம் - 6 பேருக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

கூட்டு குர்பானி DTP_ வடுகன்காளிபாளையம் கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-7-2018 அன்று இந்த வருடம் கூட்டுக் குர்பானிக்கான தொகையை மக்களுக்கு அறிவிக்கும் முகமாக சிறிய போஸ்டர் DTP - 40 அடித்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக்ஸ்டால் _காதர்பேட்டை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 29.07.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.
. பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி 1 திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் 8 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

பெண்கள் பயான் - வெங்கடேஷ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர் கிளையின் சார்பாக 29/07/2018 அன்று கிளை மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.. ராஜா அவர்கள் இஸ்லாம் கூறும் பெண்களின் பாதுகாப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

கிளை தர்பியா - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 29/07/2018 அன்று காலை 10 மணியளவில்
கிளை மர்கஸில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் சையது இப்ராஹிம் அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

பேச்சு பயிற்சி வகுப்பு _ SVகாலனி கிளை








திருப்பூர் மாவட்டம் சார்பில் எதிர்வர இருக்கும் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு
மக்கள் மத்தியில் திருகுர்ஆன் சிறப்புகளையும் திருக்குர்ஆன் மாநாட்டின் அவசியத்தையும் எடுத்து சொல்லும் வகையில் உரை நிகழ்த்தவும், தெருமுனை, பெண்கள் பயான், ஜும்ஆ உரை நிகழ்த்தவும் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும்
ஆண்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு SVகாலனி கிளை மர்கஸில் 29/07/2018 அன்று காலை துவங்கியது. 
அல்ஹம்துலில்லாஹ்.

அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஆண்கள் தர்பியா: - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம்
செரங்காடு கிளை மர்கஸில்  29/7/2018 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு தர்பியா நடைப்பெற்றது 

துஆ மனனம் செய்வோம் எனும் தலைப்பில் சகோ சேக் ஃபரீத் உரையாற்றினார்.

சந்திர கிரகண தொழுகை _செரங்காடு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 27:7:2018 அன்று நள்ளிரவில் கிரகணத்தொழுகை நடத்தப்பட்டது.

தொழுகைக்குப் பிறகு சகோ: சேக் ஃபரீத் ICஅவர்கள் " நபிவழியை பின்பற்றுவோம் "  என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

பாத்திமா என்ற சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  28/7/18 அன்று

 திருகுர்ஆன் தமிழாக்கம் வேண்டுமா? இலவசம் என்ற லேம்ப் போஸ்டரை பார்த்து

 தொடர்புக்கொண்ட  புதிதாக இஸ்லாத்தை ஏற்று கொண்ட பாத்திமா என்ற சகோதரிக்கு   

 திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும்
மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள்
 அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.