திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 14/4/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் தினமணியின் கட்டுரைக்குப் பதிலடி எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 12.04.2015 அன்று அலங்கியம் சின்ன பள்ளி வாசல் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
இதில் சகோ- அப்துல்லாஹ் அவர்கள் "இறந்தவர்களுக்காக செய்ய வேண்டிய கடமைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 12-04-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது
இதில் சகோதர் ஹனீபா அவர்கள் கோடைகாலம் என்ற தலைப்பிலும், சகோதரர் அமானுல்லாஹ் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11/04/2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாத்திமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன் கிளை சார்பாக 12/04/2015 அன்று மதரஸா குழந்தை களுக்கான தர்பியா நடைபெற்றது..
சகோ.சலீம் MISc., அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்
திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 13-04-15 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "அற்பப்பொருள் " குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 14-4-2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹமது சுலைமான்" அவர்கள் தீர்ப்பு நாளின்அதிபதி என்பதற்கு (அத்தியாயம் 1:3 வசனம்) விளக்கமளித்தார்கள்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு மார்க்கம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது .
திருப்பூர் மாவட்டம் சார்பாக 14.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "12 ஊற்றுக்கள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 13/04/2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு " ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு உண்டா ? " பற்றி மார்க்க அறிவு கலந்துரையாடல் நடைபெற்றது..
பித்அத் குறித்த பயனுள்ள கேள்விகள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு நபிவழி அல்ல என தெளிவு பெறப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..