Friday, 4 July 2014

மார்க்கம் அறிவோம் : ரமளானும் நம்பிக்கையாளர்களும்...

இரவு நேரத்தில் நின்று வணங்குதல்

குடும்பத்தாரையும் நன்மை செய்ய தூண்டுதல்


      (ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்;  (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி)
ஆதாரம் : புஹாரி (2024)


حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي يَعْفُورٍ عَنْ أَبِي الضُّحَى عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ .
(بخاري 2024)




இஃதிகாஃப்  இருந்து நற்காரியங்களை செய்தல்

குடும்பத்தாரையும் இஃதிகாஃப் இருக்க வைத்தல்


     நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் துணைவியர் இஃதிகாஃப் இருந்தனர்.
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி)
ஆதாரம் : புஹாரி (2026)


حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ
(بخاري 2026)

மார்க்கம் அறிவோம் : ரமளானும் நம்பிக்கையாளர்களும்...

தானதர்மங்களை அதிகமாக செய்ய வேண்டும்

திருக்குர்ஆனை ஒத வேண்டும்


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
            அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.
ஆதாரம் : புஹாரி (6) (1902)


حَدَّثَنَا عَبْدَانُ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ ح و حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا يُونُسُ وَمَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ نَحْوَهُ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ (بخاري 6)

அலங்கியம் கிளை சார்பாக சுன்னத் வல் ஜமாஅத்திற்கு கடிதம்....

        திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 30.06.14  அன்று அலங்கியத்தில் இருக்கும் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், சஹர் நேரம் துவக்கத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு பாங்கு சொல்வது தான் நபிவழி என்றும் அதற்கு மாறாக, நாகூர் ஹனீஃபா போன்றோரின் பாடல்களை ஒலிபரப்பு செய்வது தவறானது என்று ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..



நோன்பின் பயன்கள்_ஆண்டியக்கவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை  சார்பாக 03.07.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. அதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் நோன்பின் பயன்கள் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...