Monday, 28 July 2014

29.07.14 - நோன்பு பெருநாள் தினம்

ரமளான் மாதத்தின் 29 ஆம் நோன்பு நாளான இன்று (28.07.14 - திங்கள் கிழமை) தமிழகத்தில் பிறை தென்பட்டுவிட்டது. 

எனவே நாளை (29.07.14 - செவ்வாய் கிழமை) நோன்பு பெருநாள் தினம் ஆகும். 




அந்நாளில் அல்லாஹ்வை அதிகம் அதிகம் பெருமைப்படுத்தி துதிப்போமாக. 


நமக்கு நேர்வழிகாட்டியதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவோமாக.




ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 27.07.14


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 27.07.2014 அன்று ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 
இதில், சகோ.சேக் மைதீன்   அவர்கள் "பிரார்த்தனை"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..